Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அது மூளையா, சூப்பர் கம்பியூட்டரா.. பேட்டிங்கில் மாஸ் காட்டிய தோனி.. இளசுகளுக்கு பாடம் எடுத்த வாத்தி

சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஆனால் நீங்கள் ஆட்டத்தை முழுமையாக பார்த்து இருந்தால் சிஎஸ்கே 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருக்க வேண்டியது.

ஆனால், தோனி மற்றும் ஜடேஜாவின் அபார ஆட்டத்தால் தோல்வியின் விழும்பில் இருந்த சிஎஸ்கே, வெற்றி அருகே வரை வந்தது. ஆடுகளம் அவ்வளவு தோய்வாக இருந்தது. பந்து, பேட்டிற்கு கொஞ்சம் கூட வரவில்லை. இதனை பயன்படுத்தி கொண்ட ராஜஸ்தான் கேப்டன் சுழற்பந்துவீச்சாளர்களை வைத்தே போட்டியை நகர்த்தினார்.

csk dhoni

மோயின் அலி, கான்வே மற்றும் அம்பத்தி ராயுடு ஆகியோர் எல்லாம், சுழற்பந்துவீச்சாளர்களை அட்டாக் செய்து, தங்களது விக்கெட்டை பறிகொடுத்துவிட்டனர். இந்த இடத்தில் தான் தோனி மற்றவர்களிடம் இருந்து மாறுப்பட்டு ஒரு துருவ நட்சத்திரமாக விளங்குகிறார். டி20 கிரிக்கெட் ஒரு பல்கலைக்கழகம் என்றால் தோனி ஒரு பேராசிரியர். அவருடைய மூளை ஒரு சூப்பர் கம்பியூட்டர் போல் செயல்படுகிறது.

தோனியின் ஐடியா மிகவும் சிம்பிள். அது என்னவென்றால், ஒரு பந்துவீச்சாளர் அபாரமாக பந்துவீசி கெத்து காட்டுகிறார் என்றால், அவருக்கு மரியாதை கொடுத்து, அவருடைய பந்தில் அடித்து, விக்கெட்டை பறிகொடுத்துவிட கூடாது என்பது தான். அதற்கு காரணம், எப்படியும் கடைசியில் ஏதேனும் சாதாரன பவுலர் பந்துவீச வந்து தவறு செய்வார். அது வரை பொறுமையாக இருந்து , அப்புறம் அதிரடி காட்டு இது தான் தோனி தாரக மந்திரம். இந்த பார்முலாவை தான் தோனி பயன்படுத்தினார்.

csk vs rr

அஸ்வின், சாஹல் ஓவர்களுக்கு மரியாதை கொடுத்த தோனி, சாம்பா ஓவரில் மட்டும், அவர் தவறு செய்யம் வரை காத்திருந்து அதில் ஒரு சிக்சர் அடித்தார். அதன் பிறகு சாம்பாவும் தனது லைனை சரியாக வீச தொடங்கியதும், மீண்டும் தோனி ஜாக்கிரதையாக இருந்தார்.

ஆடுகளத்தை சரியாக கணித்த தோனி, வேகம் குறைவாக பந்துவீசும் பவுலர்கள் ஓவரை எப்படி அடித்தாலும் சரி வராது. வேகப்பந்துவீச்சாளர் வரட்டும் பார்த்து கொள்ளலாம் என்று இருந்தார். அதே போல் தோனியின் மற்றொரு யுத்தி தோற்றாலும் பரவாயில்லை, சண்டை செய்து இலக்கு அருகில் வந்தாவவது தோற்று கொள்ளலாம் என்பது தான். காரணம், அப்போது தான் ரன் ரேட் பாதிக்காது.

csk dhoni

இப்படி தீர்க்கமான முடிவு தோனியால் எப்படி எடுக்க முடிந்தது என்றால், நீ உன்னை அறிந்தால், இந்த உலகத்தில் போராடலாம் என்ற பாடல் வரி தான் பதிலாக அமையும். தோனியின் பலம் என்ன என்று அவருக்கு நன்றாகவே தெரியும். வேகப்பந்துவீச்சாளர்கள் யாக்கர் வீசுகிறேன் என்ற பெயரில் கொஞ்சம் லெங்த்தை மாற்றி வீசினால், அது பவுலரின் தலைக்கு மேலே சிக்சருக்கு பறக்கவிட்டுவிடுவார்.

இதனால் தான் தோனி, ஸ்பின்னர் ஓவரை அடிக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை. பார்த்து கொள்ளலாம் என்ற நம்பிக்கை அவரிடம் இருக்கு. இந்த யுத்தியை பயன்படுத்தி தான் தோனி, ராஜஸ்தானை கடைசி 2 ஓவரில் அலறவிட்டார். தோற்றாலும் பரவாயில்லை. சண்டை செய்யனும்.கிரிக்கெட்டிலும் சரி, வாழ்க்கையிலும் சரி. இது தான் தோனி நமக்கு கற்று கொடுக்கும் பாடம்.

Story first published: Thursday, April 13, 2023, 1:08 [IST]
Other articles published on Apr 13, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+