Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உங்களை மேட்ச் ஆட விடமாட்டோம்.. இளம் வீரருக்கு ஷாக் கொடுத்த ஹர்திக் பாண்டியா.. ஐபிஎல் ஃபிளாஷ்பேக்

மும்பை: ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருக்கும் போது இஷான் கிஷானுக்கு தான் இப்படி ஒரு ஷாக் கொடுத்துள்ளார் ஹர்திக் பாண்டியா.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 2016ஆம் ஆண்டே இஷான் கிஷன் வந்தாலும், 2020ஆம் ஆண்டு தான் 516 ரன்கள் விளாசி உச்சம் தொட்டார். அதன் பின்னர் மும்பை அணியின் முக்கிய வீரராக இஷான் கிஷன் விளங்குகிறார்.

IPL – Ishan Kishan interview about How hardik pandya helped him

ஐபிஎல் மெகா ஏலத்தில் கூட மும்பை அணி இஷான் கிஷனை 15 கோடியே 25 லட்சம் ரூபாய் கொடுத்து எடுத்தது.

ஆனால் ஒரு காலத்தில் இஷான் கிஷனை பிளேயிங் லெவனில் விளையாட வாய்ப்பு தராமல் மும்பை இந்தியன்ஸ் அணி இருந்துள்ளது. அதற்கு காரணம் இஷான் கிஷன் சின்ன பிள்ளை தனமாக ஐபிஎல் தொடரை சீரியசாக எடுக்காமல் இருந்தது தான் காரணம். வீரர்களுக்கு வழங்கப்படும் உணவு முறையை இஷான் கிஷன் ஃபாலோ செய்யவில்லை என்றும் குற்றச்சாட்டும் எழுந்தது.

IPL – Ishan Kishan interview about How hardik pandya helped him

இது தொடர்பாக மும்பை இந்தியன்ஸ் அணியை பற்றி உள்ள ஒரு டாக்குமெண்டரியிலேயே இடம்பெற்று இருக்கும். அப்போது தான் ஹர்திக் பாண்டியா தம்மிடம் நீ இது போல் செய்து கொண்டு இருந்தால் உனக்கு போட்டியில் விளையாட வாய்ப்பு தர மாட்டார்கள் என்று கூறியதாக இஷான் கிஷன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

உடற்பயிற்சி எப்படி செய்வது, உடலை எப்படி கட்டுக்கோப்பாக வைத்திருப்பது என்பது குறித்து ஹர்திக் பாண்டியா எனக்கு பாடம் எடுப்பார். குர்னல் பாண்டியாவும் எனக்கு நிறைய உதவினார்கள். எனக்கு தெரியாத பல விஷயங்களை அவர்கள் தான் கற்று கொடுத்தனர் என்றும் இஷான் கிஷன் கூறினார்.

Story first published: Wednesday, April 6, 2022, 20:50 [IST]
Other articles published on Apr 6, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+