Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரூ.8.5 கோடி வீரருடன், கொல்கத்தா நைட் ரைடர்ஸை இன்று எதிர்கொள்கிறது டெல்லி டேர் டெவில்ஸ்

கொல்கத்தா: சொந்த மண்ணான கொல்கத்தாவில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி டெல்லி டேர் டெவில்ஸ் அணியை இன்று எதிர்கொள்கிறது.

ஐபிஎல் திருவிழா துவங்கிவிட்டது. இந்த சீசனின் முதல் போட்டியில் கடந்த முறை கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியும், புதிதாக துவங்கப்பட்டுள்ள புனே சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியும் மோதின.

IPL: KKR to lock horns with Delhi Daredevils tonight

இதில் டோணி தலைமையிலான புனே அணி ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை நசுக்கிவிட்டது. ஆமாம் நசுக்கிவிட்டது. இந்நிலையில் ஏற்கனவே இரண்டு முறை கோப்பையை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், டெல்லி டேர் டெவில்ஸ் அணியும் இன்று மோதுகின்றன.

அந்த இரண்டு அணிகள் மோதும் ஆட்டம் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. கவுதம் கம்பிர் தலைமையிலான கொல்கத்தா அணியை அதன் சொந்த மண்ணில் ஜாகிர் கான் தலைமையிலான டெல்லி அணி இன்று சந்திக்கிறது.

கொல்கத்தா, டெல்லி அணிகள் மோதும் போட்டி இன்று இரவு 8 மணிக்கு துவங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்த ஆசிய கோப்பை டி20 போட்டியில் அசத்திய பவன் நெகி டெல்லி அணிக்காக விளையாட உள்ளார்.

டெல்லி அணி நெகியை ரூ. 8.5 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்துள்ளது. நெகி சிறப்பாக பந்து வீசுவதுடன், பேட்டிங்கும் செய்வார்.

Story first published: Sunday, April 10, 2016, 17:16 [IST]
Other articles published on Apr 10, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+