ஐ.பி.எல். போட்டியில் டெஸ்ட் இன்னிங்ஸ்.. தோனியை வம்பிழுத்த கொல்கத்தா அணி..!!
சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியை கேலி செய்யும் வகையில், கொல்கத்தா அணி போட்ட டிவிட் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாரம்பரியமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 4வது போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வியை தவிர்த்து டிரா செய்தது.
இங்கிலாந்து அணியின் ஒரு விக்கெட்டை வீழ்த்த ஆஸ்திரேலிய வீரர்கள் பல முயற்சிகள் எடுத்தனர்.

ஆஷஸ் டெஸ்ட்
குறிப்பாக இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது கடைசி ஒரு விக்கெட்டை வீழ்த்த ஆஸ்திரேலிய அணியும், அதனை தடுத்து டிரா செய்ய இங்கிலாந்து அணியும் போராடியது. இங்கிலாந்து வீரர்களை சுற்றி ஆஸ்திரேலிய அணி, வீரர்கள் கேட்ச் பிடிப்பதற்காக நின்றனர்

கொல்கத்தா டிவிட்
இந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ள கொல்கத்தா அணி, 2016ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் தோனிக்கும் இதே போன்று கம்பீர் வீரர்களை பக்கத்தில் நிறுத்திய புகைப்படத்தையும் ஒப்பிட்டு பதிவிட்டுள்ளது.. டி20 போட்டியில் டெஸ்ட்க்கு போல் ஃபில்டிங்கை கம்பீர் நிறுத்தி புதுமையை புகுத்தியதாக கொல்கத்தா அணி டிவிட் போட்டது.

ரசிகர்கள் கண்டனம்
தற்போது இந்த டிவிட் தான் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தோனியின் பேட்டிங் திறமையை கேலி செய்யும் விதமாக இந்த டிவிட் அமைந்துள்ளதாக தோனி ரசிகர்கள் கண்டனம் தெரிவித்தனர். டி20 போட்டியில் தோனி டெஸ்ட் இன்னிங்ஸ் போல் மெதுவாக விளையாடுவார் என்று மறைமுகமாக கொல்கத்தா அணி சொல்வதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

கேலி செய்த கே.கே.ஆர்
தோனியை அவமானப்படுத்தும் விதமாக அப்போது, அவருக்கு டெஸ்ட் போட்டிக்கான ஃபில்டிங்கை கம்பீர் நிறுத்திவிட்டதாக ரசிகர்கள் குற்றஞ்சாட்டினர். தோனி எப்போதும் விக்கெட்டுகள் விழுந்தால், இது போன்று பந்தை அடிக்காமல் தடுப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தி, இன்னிங்ஸ் இறுதியில் விளாசுவார். இது பல்வேறு சமயங்களில் கைகொடுத்துள்ளது, அதனை தான் தோனியை பிடிக்காதவர்கள் டெஸ்ட் இன்னிங்ஸ் என்று கிண்டல் செய்வார்கள்.


Click it and Unblock the Notifications