ஐபிஎலில் மொயின் அலி இல்லை.. மாற்று வீரர்களை தேர்ந்து எடுக்கும் சிஎஸ்கே.. யாருக்கு வாய்ப்பு?
மும்பை: விசா சிக்கல் காரணமாக இங்கிலாந்து வீரர் மொயின் அலி இன்னும் சிஎஸ்கே வுக்கு திரும்பவில்லை. இதனால் முதல் போட்டியில் மொயின் அலி கலந்து கொள்ள மாட்டார் என தெரிகிறது.
மொயின் அலிக்கு விசா கிடைக்க மேலும் 2 நாட்கள் ஆகலாம். அதன் பின்னர் அவர் வந்து, குவாரன்டைன் முடிந்து வருவதற்குள் சிஎஸ்கே விற்கு 2 போட்டிகள் முடிந்துவிடும்.
இதனால் பிளான் பியை சிஎஸ்கே கேப்டன் தோனி கையில் எடுத்துள்ளார். தற்போது மொயின் அலிக்கு பதில் யார் களமிறங்கலாம் என்று பார்க்கலாம்.

மிட்செல் சாண்ட்னர்
சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசையில் மொயின் அலி மூன்றாவது வீரராக இறங்குகிறார். தற்போது அவர் இல்லை என்பதால், அந்த இடத்தில் ராபின் உத்தப்பாவை களமிறக்கி, சிஸ்கே சுழற்பந்துவீச்சு ஆல் ரவுண்டரான நியூசிலாந்தை சேர்ந்த மிட்செல் சாண்ட்னரை சேர்க்கலாம். மிட்செல் சாண்டனர் கீழ் வரிசையில் அதிரடியாக ஆடக் கூடியவர் என்பதால் அவருக்கு கூடுதல் சாதகம்.

மகிஷ் தீக்சனா
தோனிக்கு இருக்கும் 2வது வாய்ப்பு இலங்கை சுழற்பந்துவீச்சாளர் மகிஷ் தீக்சனா. தீக்சனா நுட்பமாக பேட்ஸ்மேனுக்கு நெருக்கடி தரும் வகையில் சுழற்பந்து வீசக்கூடியவர். மொயின் அலி இல்லாத குறையை அவர் தீர்த்து வைப்பார். பிளேயிங் லெவனில் இவரை எப்படி சேர்க்கலாம் என்று தோனியே யோசித்த நிலையில், தற்போது அதற்கான வாய்ப்பு எற்பட்டுள்ளது.

பிரசாந்த் சோலங்கி
தோனியின் அதீத நம்பிக்கையை பெற்றுள்ள சுழற்பந்துவீச்சாளர் பிரசாந்த் சோலங்கிக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கலாம். சிஎஸ்கேவின் நெட் பவுலராக பணியை தொடங்கிய அவர் தற்போது ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போய் உள்ளார். வார்னே போலவே பந்துவீசும் சோலங்கிக்கு இது நல்ல வாய்ப்பாக அமையும்.

சிவம் துபே
இதே போன்று வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் சிவம் துபேவுக்கும் வாய்ப்பு உள்ளது. காரணம், அவர் பயிற்சியில் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். இதனால் சிஎஸ்கே அணி பேட்டிங்கை வலுப்படுத்த நினைத்தால் மொயின் அலி களமிறங்கும் இடத்தில் சிவம் துபேவை இறக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.


Click it and Unblock the Notifications