Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அமீரக ஐபிஎல் போட்டிகள் இன்றே கடைசி.. நாளை முதல் இந்தியாவில்!

துபாய்: ஐக்கிய அமீரகத்தில் நடந்து வரும் ஐபிஎல் முதல் சுற்றுப் போட்டிகள் இன்றுடன் முடிகின்றன. இன்றோடு சேர்த்து மொத்தம் 20 போட்டிகளை அமீரகம் பார்த்துள்ளது.

நாளை முதல் இந்தியாவுக்குப் போடடிகள் இடம் பெயருகின்றன. மீதமுள்ள 36 சுற்றுப் போட்டிகள் இந்தியாவில் நடைபெறவுள்ளன.

இறுதிப் போட்டி ஜூன் 1ம் தேதி மும்பையில் வாங்கடே மைதானத்தில் நடைபெறும்.

அடடா அடிடா ஐபிஎல்

அடடா அடிடா ஐபிஎல்

7வது ஐபிஎல் தொடர் ஏப்ரல் 16ம் தேதி அமீரகத்தில் கோலாகலமாக தொடங்கியது. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸும், கொல்கத்தா நைட் ரைடர்ஸும் மோதின. இதில் கொல்கத்தா அமோக வெற்றி பெற்றது.

20 அட்டகாச போட்டிகள்

20 அட்டகாச போட்டிகள்

அதன் பின்னர் இதுவரை 19 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இன்று 20வது போட்டியாக மும்பை இந்தியன்ஸும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தும் மோதுகின்றன.

நாளை முதல் இந்தியாவில்

நாளை முதல் இந்தியாவில்

இந்தப் போட்டியோடு அபுதாபிக்கும், ஷார்ஜாவுக்கும், துபாய்க்கும் குட்பை சொல்கிறது ஐபிஎல். நாளை முதல் இந்தியாவில் போட்டிகள் நடைபெறவுள்ளன.

36 போட்டிகள்

36 போட்டிகள்

மொத்தம் 36 சுற்றுப் போட்டிகள் இந்தியாவில் நடைபெறவுள்ளன. இது போக 2 குவாலிபயர் மற்றும் ஒரு எலிமினேட்டர் போட்டிகள் நடைபெறும். கடைசியாக இறுதிப் போட்டி ஜூன் 1ம் தேதி மும்பையில் நடைபெறும்.

ராஞ்சியில் .. சென்னை சூப்பர் கிங்ஸ்

ராஞ்சியில் .. சென்னை சூப்பர் கிங்ஸ்

நாளை ராஞ்சியில் நடைபெறும் 21வது போட்டியில் டோணி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸும், கொல்கத்தா நைட் ரைடர்ஸும் மோதவுள்ளன. ராஞ்சி டோணியின் சொந்த ஊராகும்.

Story first published: Wednesday, April 30, 2014, 18:20 [IST]
Other articles published on Apr 30, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+