For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிஎஸ்கே வீரரை பறிக்கப் முயலும் 3 முன்னணி அணிகள்.. காரணம் கேட்டு அதிர்ந்த ரசிகர்கள்..தோனி நிலைப்பாடு?

பெங்களூரு: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிக முக்கியமான வீரரை 3 முன்னணி அணிகள் பறிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் மெகா ஏலத்திற்கு ( பிப்.12, 13) இன்னும் 2 நாட்களே உள்ளதால் ஒவ்வொரு அணியும் தங்களது இறுகட்ட திட்டங்களை வகுத்து வருகின்றனர்.

அந்த வகையில் நடப்பு சாம்பியனான சென்னை அணி, மீண்டும் தங்களது பழைய வீரர்களையே அணிக்குள் எடுக்க ஸ்கெட்ச் போட்டு வைத்துள்ளது.

சிஎஸ்கேவின் திட்டம்

சிஎஸ்கேவின் திட்டம்

கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அனைத்து வீரர்களுமே சிறப்பாக செயல்பட்டனர். அதில் இருந்து ஃபாப் டூப்ளசிஸ், ராபின் உத்தப்பா, தீபக் சஹார், லுங்கி ங்கிடி, ஷர்துல் தாக்கூர் ஆகியோரை மீண்டும் அதிக தொகைக்கு ஏலம் கேட்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தோனியின் விருப்பமும் இதே தான்.

3 அணிகளின் குறி

3 அணிகளின் குறி

இந்நிலையில் அணியின் தூணாக இருக்கும் டூப்ளசிஸை எப்படியாவது வாங்கிடவேண்டும் என பஞ்சாப் கிங்ஸ், ஆர்சிபி, கொல்கத்தா ஆகிய 3 அணிகளும் போட்டிப்போட்டு வருகின்றனர். அவருக்காக ரூ.12 கோடி வரை செலவு செய்யவும் தயாராக ஒதுக்கி வைத்துள்ளதாக தெரிகிறது. ஆனால் பேட்டிங்கிற்காக மட்டும் அவரை தேர்வு செய்யவில்லை.

காரணம் என்ன

காரணம் என்ன

ஆர்சிபி, கொல்கத்தா, பஞ்சாப் ஆகிய 3 அணிகளுமே மெகா ஏலத்தில் கேப்டனை வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இவற்றிற்கு பொருந்தக்கூடியவர் டூப்ளசிஸ். சர்வதேச தொடர்களில் தென்னாப்பிரிக்காவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக்கொடுத்த கேப்டன்சி அனுபவம் டூப்ளசிஸுக்கு உள்ளது. இதனால் அவரை கேப்டனாக முன்னிறுத்திக்கொள்ள முயன்று வருகின்றன.

தோனியின் நிலைப்பாடு

தோனியின் நிலைப்பாடு

ஆனால் டூப்ளசிஸை விட தோனிக்கும் விருப்பம் இல்லை. கடந்த சீசனில் ருதுராஜுடன் அவரது பார்ட்னர்ஷிப் சிறப்பாக செட்டாகிவிட்டது. மேலும் ஒருவேளை தோனி இந்தாண்டு ஓய்வுபெற்றால், கேப்டன்சிக்கான தேர்வாகவும் அவர் இருக்கலாம். எனவே அவரை எப்படியாவது ஏலம் எடுக்க வேண்டும் என தோனி பரிந்துரைத்துள்ளதாக தெரிகிறது.

Story first published: Thursday, February 10, 2022, 13:02 [IST]
Other articles published on Feb 10, 2022
English summary
3 teams are trying to have Start opener of CSk in IPL 2022 mega auction
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+