தோனியின் பகல் கனவு!! ஐபிஎல் மெகா ஏலத்தில் சிஎஸ்கேவுக்கு வந்த தலைவலி.. புலம்பும் ரசிகர்கள்!
பெங்களூரு: ஐபிஎல் மெகா ஏலத்தில் தோனி போட்டு வைத்துள்ள திட்டம் பலிக்குமா என்ற குழப்பத்தில் சிஎஸ்கே நிர்வாகமும் ரசிகர்களும் உள்ளனர்.
ஐபிஎல் மெகா ஏலம் நாளை பெங்களூரில் உள்ள தனியார் ஹோட்டலில் தொடங்கவுள்ளது.
மொத்தம் 10 அணிகள், 590 வீரர்கள் என பிரம்மாண்டமாக உள்ள இந்த மெகா ஏலத்திற்காக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

சிஎஸ்கே முடிவு
நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி நேரில் வந்து திட்டங்களை வகுத்துக் கொடுத்துள்ளார். அந்த அணிக்கு இன்னும் ரூ.48 கோடி மீதமுள்ள நிலையில் 17 வீரர்களை ஏலத்தில் எடுக்க வேண்டியதுள்ளது. இதற்காக
கேப்டன் தோனி இந்த முறையும் வழக்கமான திட்டத்தையே செயல்படுத்தவுள்ளார்.

தோனியின் ப்ளான்
அதாவது அணியின் பழைய வீரர்களையே மீண்டும் எடுப்பதற்காக குறி வைத்துள்ளார். கடந்த முறை சென்னை அணிக்காக சிறப்பாக செயல்பட்ட டூப்ளசிஸ், ஷர்துல் தாக்கூர், ஹாசல்வுட், தீபக் சஹார், அம்பத்தி ராயுடு போன்றோரை மட்டும் மீண்டும் எப்படியாவது அணிக்குள் எடுத்துவிட வேண்டும் என பரிந்துரைத்துள்ளார்.

மெகா ஏலத்தில் சிக்கல்
ஆனால் அவர் குறித்துக்கொடுத்துள்ள வீரர்களை எடுப்பது எளிதல்ல, டூப்ளசிஸ் தான் கடந்த சீசனில் அதிக ஸ்கோர் அடித்தவர்கள் பட்டியலில் 2வது இடம் பிடித்தார். இதே போல ஷர்துல் தாக்கூர், தீபக் சஹார் ஆகியோரும் பவுலிங் மட்டுமல்லாது பேட்டிங்கிலும் கலக்கி வருகின்றனர். சர்வதேச போட்டிகளிலும் தற்போது சிறப்பாக விளையாடியுள்ளதால் பல அணிகளும் போட்டி போட்டு வருகிறது.

பட்ஜெட் சிக்கல்
சென்னை அணி ஒவ்வொரு வீரரையும் ரூ. 4 கோடி வரை ஏலம் எடுக்க வேண்டி இருக்கும் என்பதால் பட்ஜெட் பிரச்சினை ஏற்படலாம். ஒருவேளை மற்ற அணிகள் ஆர்வம் காட்டாத போது வேண்டுமானால் சிஎஸ்கேவுக்கு அவர்கள் மீண்டும் கிடைக்கலாம். கடந்த முறை டூப்ளசிஸை இப்படி தான் ரூ. 1.5 கோடி என்ற குறைந்த தொகைக்கு ஏலம் எடுத்தது. இப்படி நடந்தால் தோனியின் பகல் கனவு பலிக்கலாம் .


Click it and Unblock the Notifications