Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அப்பாடா.. அதிரடி சரவெடி.. சிஎஸ்கே முதல் ஏலமாக எடுத்த ஓப்பனிங் வீரர்!

பெங்களூரு: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் ஏலமாக இந்திய ஓப்பனிங் வீரரை அடிப்படை தொகைக்கே ஏலம் எடுத்தது.

ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை அணிக்கு முதலில் பின்னடைவுகளே இருந்து வந்தது.

முதலில் ஏலம் விடப்பட்ட நட்சத்திர வீரர்களில் இருந்து எந்தவொரு வீரரையும் அந்த அணியால் எடுக்க முடியவில்லை.

கைநழுவிச்சென்ற டூப்ளசிஸ்

கைநழுவிச்சென்ற டூப்ளசிஸ்

சென்னை அணிக்கு கடந்த சீசன்களில் சிறப்பான ஓப்பனிங் கொடுத்தவர் டூப்ளசிஸ். இந்த முறை அவரை மீண்டும் ஏலம் எடுப்பதற்காக கடுமையாக போராடியது. ரூ. 5 கோடி வரை ஏலம் கேட்ட போதும் ஆர்சிபி அணி முட்டுக்கட்டை போட்டது. டூப்ளசிஸை ரூ, 7 கோடிக்கு ஏலம் எடுத்தது.

வார்னர்

வார்னர்

இதனையடுத்து ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் மீது சிஎஸ்கே கவனம் செலுத்தியது. ஆனால் அவரும் கிடைக்கவில்லை. வார்னரை டெல்லி கேப்பிடல்ஸ் அணி ரூ. 6.25 கோடிக்கு ஏலம் எடுத்தது. இதனையடுத்து சிஎஸ்கேவின் ஓப்பனராக இனி யார் இருப்பார் என்ற குழப்பம் நீடித்து வந்தது.

சிஎஸ்கேவின் முதல் ஏலம்

சிஎஸ்கேவின் முதல் ஏலம்

இந்நிலையில் இந்திய வீரர் ராபின் உத்தப்பா ரூ.2 கோடிக்கு அடிப்படை தொகையுடன் ஏலம் விடப்பட்டார். அவரை எந்த அணியும் கண்டு கொள்ளாததால் சிஎஸ்கே அணியே அடிப்படை தொகைக்கு எடுத்துக் கொண்டது. அவர் கடந்த சீசனிலும் சிஎஸ்கேவுக்காக சிறப்பாக விளையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓப்பனிங்

ஓப்பனிங்

இதன் மூலம் சென்னை அணியின் ஓப்பனராக ராபின் உத்தப்பா தான் இருப்பார் எனத் தெரிகிறது. ராபின் உத்தப்பா ஐபிஎல் தொடரில் ஓப்பனராக மிகச்சிறப்பாக செயல்பட்டுள்ளார். இதுமட்டுமல்லாமல் அவர் இந்திய வீரர் என்பதால் சிஎஸ்கேவுக்கு கூடுதல் பலம்.

Story first published: Saturday, February 12, 2022, 19:02 [IST]
Other articles published on Feb 12, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+