
அதிருப்தியில் ரசிகர்கள்
இதனால் ஆத்திரமடைந்த சென்னை அணி ரசிகர்கள், "மிக்சர் சாப்பிடவா அங்க போனீங்க, தண்ணீர் பாட்டில் எடுக்கவாவது ஒரு வீரரை எடுங்க" என பல மோசமான விமர்சனங்களை அள்ளி வீசினர். அப்படியே சிஎஸ்கே ஏலம் எடுக்க முற்பட்டாலும், டெல்லி, ஆர்சிபி அணிகள் அதிக தொகையை ஏற்றிவிடுவதால் பின்வாங்கியது. ஒருகட்டத்தில் தோனியின் திட்டம் இந்த முறை பலிக்காது என்ற நிலைக்கே ரசிகர்கள் சென்றுவிட்டனர்.

கடைசியில் ட்விஸ்ட்
இந்நிலையில் கடைசி நேரத்தில் தான் தோனி ட்விஸ்டையே வைத்திருந்துள்ளார். ஏலத்தின் கடைசிகட்ட பகுதிகளில் திடீரென அடுத்தடுத்து வீரர்களை ப்ளான் செய்து தூக்கினர். அதுவும் மிகவும் குறைந்த விலையில் தரமான வீரர்களாக பார்த்து பார்த்து எடுத்தனர். இதனை கண்ட மற்ற அணிகள் வியப்பில் வாயடைத்து போனது.

சிஎஸ்கே தூக்கிய வீரர்கள்
ஓடிசாவை சேர்ந்த தொடக்க வீரர் சேனாபதியை ரூ. 20 லட்சத்திற்கு வாங்கியது. இதன் பின்னர், நியூசிலாந்தின் முன்னணி ஓப்பனிங் வீரர் டெவொன் கான்வேவை ரூ. 1 கோடிக்கு ஏலம் எடுத்தது. இவர் டூப்ளசிஸுக்கு மாற்றாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்தடுத்து தேர்வு
இதே போல நியூசிலாந்து முன்னணி ஸ்பின்னர் மிட்செல் சாண்ட்னரை ரூ. 1.9 கோடிக்கு வாங்கியது. இவர் ஏற்கனவே சிஎஸ்கேவுக்காக சிறப்பாக விளையாடியுள்ளார். தென்னாப்பிரிக்காவில் சிறப்பாக விளையாடி வரும் இளம் வீரர் டுவைன் ப்ரிட்டோரியஸை ரூ.50 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது. இவர்கள் மட்டுமின்றி சிமார்ஜீட் சிங் ரூ. 20 லட்சம், இலங்கை சுழற்பந்துவீச்சாளர் மகிஷ் தீக்சானாவை ரூ, 70 லட்சம் என அடுத்தடுத்து தூக்கியது.

மாஸ்டர் தோனி
சென்னை அணி ஏலம் எடுத்த அத்தனை வீரர்களுமே தற்போது சிறப்பாக விளையாடி வருபவர்கள். இதில் சில வீரர்கள் எதிர்காலத்தில் சர்வதேச போட்டிகளில் கலக்குவார்கள் என வல்லுநர்கள் கூறியுள்ளனர். இதனால் தோனி மீண்டும் மாஸ்டர் என்பதை நிரூபித்து விட்டார் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications