
கஞ்சத்தனம்?
சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் பெயர் வந்த போது சிஎஸ்கே திரும்பி கூட பார்க்கவில்லை. பின்னர் டுபிளஸிஸ்-காக சென்னை அணி கடுமையாக போராடியது. ஆனால் 7 கோடி வந்தவுடன் சென்னை அணி பின்வாங்கியது. இதே போன்று வார்னர், டி காக் ஆகியோருக்கு முதலில் ஆர்வம் காட்டிய சென்னை அணி பின்னர் பந்தயத்திலிருந்து வெளியேறியது.

வயதான வீரர்கள்
சரி,இதனால் இளம் வீரர்களை எடுக்க போகிறார்கள் போல என நினைத்து சென்னை ரசிகர்கள் நினைத்து இருந்த போது, திடீரென்று 36 வயதான உத்தப்பாவை 2 கோடி ரூபாய்க்கும், 38 வயதான பிராவோவை 4.4 கோடி ரூபாய்க்கும் எடுத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது.

இளம் வீரர்கள்
பிராவோ, உத்தப்பா திறமையான வீரர்களாக இருந்தாலும், அவர்களுக்கு வயதாகிவிட்டது. இதனைத் தொடர்ந்து இளம் வீரர்கள் பக்கம் சென்னை கண்கள் திரும்பியது. நிதிஷ் ராணா, தீபக் ஹூடாவை சென்னை அணிக்கு ஏலத்தில் தேர்வு செய்ய ஆர்வம் காட்டியது. ஆனால் ஹூடாவை 5.75 கோடி ரூபாய்க்கு லக்னோ அணி ஏலத்தில் எடுத்தது.

என்ன செய்யனும்?
இதே போன்று ஆல் ரவுண்டர் ஹோல்டரையும் சென்னை அணி தவறவிட்டது. தற்போது சென்னை அணி நடுவரிசை விரர்களையும், வேகப்பந்துவீச்சாளர்களையும் குறிவைத்து எடுக்க வேண்டும். தற்போது கைவசம் 41 கோடி ருபாய் உள்ளது. இதை வைத்து இனியாவது சென்னை செயல்படுமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











