
தொடக்க வீரர்கள்
சென்னை அணி எப்போதுமே தங்களது அணியில் விளையாடிய வீரர்களை மட்டுமே குறிவைத்து எடுக்கும். தற்போதும் அதே ஸ்டைலை தான் இம்முறை பின்பற்றி இருக்கிறார்கள். இதில் டுபிளஸிஸ், ஷர்துல் தாக்கூர் மட்டும் தற்போது மிஸ்சிங் . டுபிளஸில் இல்லாததால் சென்னை அணி நியூசிலாந்து வீரர் கான்வேவை தேர்வு செய்துள்ளது. இதே போன்று ராபின் உத்தப்பா, ஹரி நிசாந்த், சேனாபதி போன்ற ஆப்சன்களும் இப்போது சிஎஸ்கேக்கு உள்ளது.

நடுவரிசை, ஆல்ரவுண்டர்
நடுரிசையில் மொயின் அலி, அம்பத்தி ராயுடு, ஜடேஜா, தோனி ஆகியோர் ரெடியாக உள்ளனர், ஆல் ரவுண்டர் வேகப்பந்துவீச்சாளர் வரிசையில் பிராவோ, தீபக் சாஹர், அண்டர் 19 ஆல் ரவுண்டர் ராஜவர்த்தனே ஹங்கர்கேக்ர் ஆகியோர் உள்ளனர். ஜடேஜா போல் சுழற்பந்தும், பேட்டிங்கும் செய்ய கூடிய மிட்செல் சாண்ட்னரும் சிஎஸ்கே அணிக்கு திரும்பி விட்டார். சுழற்பந்துவீச்சிலும் இலங்கை வீரர் மகிஷ் தீக்சாணாவை சென்னை அணி தேர்வு செய்துள்ளது.

வேகப்பந்துவீச்சு
வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளராக கிறிஸ் ஜார்டன், டுவைன் ப்ரிட்டோரியஸ், ஆடம் மில்ன் ஆகியோரை சென்னை அணி தேர்வு செய்துள்ளது. உள்ளூர் வேகப்பந்துவீச்சாளராக ஆசிப், திஷ்பாண்டே போன்றோர் உள்ளனர். சென்னை அணியின் பேட்டிங் வரிசையில் 10 வீரர்களும் பேட்டிங் செய்ய கூடிய வகையில் தான் அமைக்கப்பட்டுள்ளது. வேகப்பந்துவீச்சில் எதிரணியை பயமுறுத்தும் அளவுக்கு ஒரு வீரர் இல்லாதது மட்டும் குறையாக பார்க்கப்படுகிறது

பிளேயிங் லெவன்
பேட்டிங் வரிசை 1,கான்வே/ ராபின் உத்தப்பா/சேனாபதி , 2.ருத்துராஜ் கெய்க்வாட், 3, மொயின் அலி, 4, அம்பத்தி ராயிடு/ ஜெகதீசன், 5. தோனி, 6, ஜடேஜா, 7, சிவம் துபே/ஹங்கர்கேகர், 8, பிராவோ/ ப்ரிடோரியஸ் 9. தீபக் சாஹர்,10. ஆடம் மிலின்/கிறிஸ் ஜார்டன் 11.ஆசிஃப்/ துஸ்பாண்டே ( ஓபனிங் இந்திய வீரராக இருந்தால், இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஒருவரை தூக்கிவிட்டு, மிட்செல் சாண்டனர் அல்லது தீக்சணா ஆகியோரை தேர்வு செய்யலாம்)


Click it and Unblock the Notifications











