Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

‘தலைவன்’ தோனி எடுப்பது தான் இறுதி முடிவு! மெகா ஏலத்தில் சிஎஸ்கே ப்ளான் என்ன? காசி விஸ்வநாதன் பதில்

பெங்களூரு: ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் திட்டம் என்னவென்பது குறித்து அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறியுள்ளார்.

2022ம் ஆண்டிற்காக ஐபில் மெகா ஏலம் இன்று பெங்களூருவில் உள்ள தனியார் ஹோட்டலில் தொடங்கவுள்ளது.

இந்த முறை மெகா ஏலத்திற்காக 600 வீரர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளனர். இதில் 378 இந்திய வீரர்களும், 222 அயல்நாட்டு வீரர்களும் உள்ளனர்.

சிஎஸ்கே அணி

சிஎஸ்கே அணி

இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்தெந்த வீரர்களை தேர்ந்தெடுக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உள்ளது. இதற்காக சமீபத்தில் சென்னைக்கு வந்த கேப்டன் தோனி வீரர்களின் முழு பட்டியலை தயார் செய்து அணி நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளார்.

இளம் வீரர்கள்

இளம் வீரர்கள்

தோனியின் திட்டத்தின்படி கடந்த சீசன்களில் அணிக்காக விளையாடிய பழைய வீரர்களை மீண்டும் ஏலம் எடுப்பதுதான் முக்கிய திட்டமிட்டமாக உள்ளது. மேலும் உள்நாட்டு தொடர்களில் சிறப்பாக செயல்பட்ட சில இளம் வீரர்களையும் தோனி குறிவைத்துள்ளார்.

காசி விஸ்வநாதன் பேச்சு

காசி விஸ்வநாதன் பேச்சு

இந்நிலையில் மெகா ஏலம் குறித்து சென்னை அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் பேசியுள்ளார். அதில், சென்னை அணியை பொறுத்தவரை, வீரர்களுடன் உணர்வு ரீதியாக மிகவும் நெருக்கமாக இருக்கும். எப்போதும் போல கேப்டன் தோனி இந்த முறையும் நம்மை ஏமாற்றமாட்டார். ஏலத்தின்போது தான், யார் யார் வேண்டும் என்பதை தோனி இறுதி செய்வார்; ‘தலைவன்' தோனி எடுக்கும் முடிவு தான் இறுதி என்று கூறியுள்ளார்.

Recommended Video

KKR buy Shreyas, Warner Joins DC | IPL 2022 Auction | OneIndia Tamil
தோனி யோசனை

தோனி யோசனை

தொடர்ந்து பேசிய அவர், தோனி ஒவ்வொரு முறையும் கடைசி நேரத்தில் பெரும் யோசனைகளுக்கு பிறகு எந்தெந்த இடங்களுக்கு எந்தெந்த வீரர்கள் என்பதை கூறுவார். அதன்படியே இந்த வருடமும் நடக்கும். இந்த வருடம் வீரர்களை தேர்வு செய்வது மிகவும் கடினமான ஒன்றாக இருக்க போவதாகவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தோனி ஒவ்வொரு முறையும் கடைசி நேரத்தில் பெரும் யோசனைகளுக்கு பிறகு எந்தெந்த இடங்களுக்கு எந்தெந்த வீரர்கள் என்பதை கூறுவார். அதன்படியே இந்த வருடமும் நடக்கும். இந்த வருடம் வீரர்களை தேர்வு செய்வது மிகவும் கடினமான ஒன்றாக இருக்க போவதாகவும் அவர் தெரிவித்தார்.

Story first published: Saturday, February 12, 2022, 17:56 [IST]
Other articles published on Feb 12, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+