For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் ஏலத்தின் முதல் நாளில் சிஎஸ்கே செயல்பாடு எப்படி..!! பிளேயிங் லெவனை ரெடி செய்த தோனி

பெங்களூரு: ஐபிஎல் மெகா ஏலத்தின் முதல் நாளில் சிஎஸ்கே வின் செயல்பாடு ரசிகர்களிடையே பெரும் விமர்சனத்தை பெற்றுள்ளது.

டுபிளஸிஸ், வார்னர், தினேஷ் கார்த்திக், ஷாரூக்கான் ஆகியோரை கைநழுவ விட்டதாக சென்னை அணி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில், உண்மையிலேயே சென்னை அணியின் செயல்பாடு, அவ்வளவு மோசமாக உள்ளதா என்பதை தற்போது காணலாம்.

எதிர்காலம்

எதிர்காலம்

சென்னை அணி எப்போதுமே தங்களது அணியில் விளையாடிய வீரர்களை மட்டுமே குறிவைத்து எடுக்கும். தற்போதும் அதே ஸ்டைலை தான் பின்பற்றி இருக்கிறார்கள். ஆனால் அடுத்த 10 ஆண்டுகளுக்கான அணி என்ற எதிர்காலத்தை பார்த்தால் பிராவோ, ராயுடு, உத்தப்பாவுக்கு செலவு செய்த பணத்தை, படிக்கல், பிரவீஸ், ஷாரூக்கான் போன்ற இளம் வீரர்களை தேர்வு செய்து இருக்கலாம்.

பழைய அணி

பழைய அணி

தற்போது கைவசம் சுமார் 20 கோடி சென்னை அணியிடம் உள்ள நிலையில், இன்றாவது 2 அல்லது 3 இளம் வீரர்களை குறிவைக்கலாம். ஆனால், இந்த சீசனுக்கான கிட்டத்தட்ட பழைய அணியையே சிஎஸ்கே தயார் செய்துள்ளது.சொல்ல போனால் பிளேயிங் லெவன் நமக்கு கிட்டதட்ட ரெடி. இதனை தான் தோனியும் விரும்பி இருக்கிறார்.

அணி விவரம்

அணி விவரம்

தொடக்க வீரராக ராபின் உத்தப்பா மற்றும் ருத்துராஜ் கெய்க்வாட் களமிறங்கலாம். நடுரிசையில் மொயின் அலி, அம்பத்தி ராயுடு, ஜடேஜா, தோனி ஆகியோர் ரெடியாக உள்ளனர், ஆல் ரவுண்டர் வேகப்பந்துவீச்சாளர் வரிசையில் பிராவோ, தீபக் சாஹர் ஆகியோர் உள்ளனர். வேகப்பந்துவீச்சாளராக ஆசிஃப், துசார் தேஷ்பாண்டே ஆகியோர் உள்ளனர்.

இன்றைய பிளான்

இன்றைய பிளான்

இதனால் இன்றைய ஏலத்தில் வேகப்பந்துவீச்சாளர்கள், ஆல் ரவுண்டர்கள், சுழற்பந்துவச்சாளர்கள் என ஒரு 6 வீரர்களை எடுத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரெடி. நாம் ஏற்கனவே சொன்னது போல் 70 சதவீதம் சீனியர்கள், 30 சதவீதம் ஜூனியர்கள் என்ற அளவில் தான் அணியை தயார் செய்ய உள்ளது சிஎஸ்கே,

தயாரான அணி

தயாரான அணி

தற்போதைய அணியின் பேட்டிங் வரிசை 1, ராபின் உத்தப்பா, 2.ருத்துராஜ் கெய்க்வாட், 3, மொயின் அலி, 4, அம்பத்தி ராயிடு, 5. தோனி, 6, ஜடேஜா, 7, பிராவோ, 8, தீபக் சாஹர், 9, ஆசிஃப். 10, துசார் தேஷ்பாண்டே , விதிப்படி ஒவ்வொரு அணியும் 18 வீரர்களை குறைந்தபட்சம் தேர்வு செய்ய வேண்டும்.

Story first published: Sunday, February 13, 2022, 10:53 [IST]
Other articles published on Feb 13, 2022
English summary
IPL Mega auction 2022 Day 1 – CSK Playing xi is almost ready ஐபிஎல் ஏலத்தின் முதல் நாளில் சிஎஸ்கே செயல்பாடு எப்படி..!! பிளேயிங் லெவனை ரெடி செய்த தோனி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+