வார்னருக்காக சிஎஸ்கே காட்டிய அதீத ஆர்வம்.. ஸ்மார்ட் மூவ் கொடுத்த டெல்லி.. அட்டகாச ஓப்பனிங் ரெடி!
பெங்களூரு: டேவிட் வார்னருக்காக சிஎஸ்கேவிடம் கொடுத்து விடாமல், டெல்லி அணி ஏலம் எடுத்து சிறப்பாக காய் நகர்த்தியுள்ளது.
ஐபிஎல் மெகா ஏலம் 2022 பெங்களூருவில் உள்ள தனியார் ஹோட்டலில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த ஏலத்தில் அதிக மதிப்புடைய வீரர்களை ஐபிஎல் நிர்வாகம் முதலில் வரிசைக்கட்டி ஏலம் விட்டது.

வார்னரின் ஆட்டம்
அதன்படி ரசிர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னரும் இதில் ஏலம் விடப்பட்டார். ரூ.2 கோடி என்ற அடிப்படை தொகை கொண்ட அவரை ஏலம் எடுக்க தொடக்கத்தில் அனைத்து அணிகளும் ஆர்வம் காட்டிய நிலையில் நேரம் ஆக ஆக சில அணிகள் பின்வாங்கின.

சிஎஸ்கே ஆர்வம்
ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடுமையாக போராடியது. டூப்ளசிஸின் இடத்தை நிரப்புவதற்காக அந்த அணி வார்னருக்கு குறிவைத்திருந்தது. அதற்காக ரூ. 6 கோடி தாண்டியும் ஏலம் கேட்டது. ஆனால் சிஎஸ்கேவின் கனவுக்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணி இடையூறாக வந்து நின்றது.

கடும் போராட்டம்
இரு அணிகளும் மாறி மாறி தொகையை ஏற்ற ரூ.10 கோடி வரை செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒருக்கட்டத்தில் சென்னை அணி பட்ஜெட் காரணமாக பின் வாங்க, ஸ்மார்ட்டாக யோசித்த டெல்லி அணி ரூ. 6.25 கோடிக்கு ஏலம் எடுத்தது. இதன் மூலம் அந்த அணியின் பேட்டிங் படு பலமாக மாறியுள்ளது.

டெல்லி அணிக்கு பலன்
டெல்லி அணிக்கு இதற்கு முன்னர் ஷிகர் தவான் மற்றும் பிரித்வி ஷா ஜோடி தான் தூண் போல நின்று காப்பாற்றினர். எனவே தவானின் இடத்திற்கு மற்றொரு அனுபவ வீரரான வார்னரை கொண்டு வந்துள்ளது. தவான் ரூ.8 கோடி தாண்டி ஏலம் போனார். ஆனால் அதே திறமைக் கொண்ட வீரரை டெல்லி அணி ரூ.6.25 கோடிக்கே வாங்கி பணத்தை மிச்சம் செய்தது.

அதிரடி ஓப்பனிங்
கடந்த சீசனில் பேட்டிங்கில் சொதப்பிய வார்னர், டி20 உலகக்கோப்பையில் தொடர் நாயகன் விருது வென்று அசத்தினார். இதன் பின்னர் பிபிஎல் மற்றும் ஆஷஸ் டெஸ்ட் தொடரிலும் சதமடித்து தற்போது ஃபுல் ஃபார்மில் டேவிட் வார்னர் இருக்கிறார். இதன் மூலம் டெல்லி அணி நன்கு சிந்தித்துள்ளது என ரசிகர்கள் பாராட்டியுள்ளனர்.


Click it and Unblock the Notifications