For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிஎஸ்கேவின் புரியாத திட்டம்.. கைநழுவிச் சென்ற முக்கிய வீரர்கள்.. என்னதான் நடக்கிறது அணிக்குள்?

பெங்களூரு: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கடைசி வரை சென்று முக்கிய வீரர்களை இழந்து வருவதால் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

ஐபிஎல் மெகா ஏலத்தின் முதல் நாள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இன்றைய நாள் தொடங்கியது முதலே ஏலம் எடுப்பதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தடுமாறி வருகிறது.

ஏமாற்றிய சிஎஸ்கே

ஏமாற்றிய சிஎஸ்கே

இன்று காலை முதல் செஷனில் பெரிது எதிர்பார்க்கப்பட்ட சென்னை அணி முன்னணி வீரர்களை ஒருவரைக்கூட ஏலம் எடுக்கவில்லை. ரூ.5 கோடி வரை சென்றுவிட்டு, சைலண்டாக ஓரம் நகர்ந்தது. இதனால் அஸ்வின், வார்னர், டூப்ளசிஸ் உள்ளிட்ட பல முக்கிய வீரர்கள் கையை விட்டுச்சென்றனர்.

மீண்டும் வயதானவர்கள்

மீண்டும் வயதானவர்கள்

காலையில் மற்ற அணிகளின் ஏலத்தொகையை ஏற்ற தான் சிஎஸ்கே அப்படி செய்தது என கூறிக்கொண்டாலும், மதியமும் புரியாத புதிராகவே இருந்தது. 36 வயதாகும் ராபின் உத்தப்பாவை ரூ. 2 கோடிக்கும், 38 வயதாகும் பிராவோவை ரூ. 4.4 கோடிக்கும் ஏலம் எடுத்தது. இதனை தொடர்ந்து 36 வயதாகும் அம்பத்தி ராயுடுவை ரூ.6.75 கோடிக்கு ஏலம் எடுத்தது.

எதிர்பார்க்காத ட்விஸ்ட்

எதிர்பார்க்காத ட்விஸ்ட்

மீண்டும் வயதானவர்களின் அணியாக சிஎஸ்கே ப்ளான் போடுகிறது என்ற விமர்சனங்கள் எழுந்த போது, யாரும் எதிர்பாராத விதமாக தீபக் சஹாரை ரூ.14 கோடி கொடுத்து வாங்கியது. அவரை மற்ற அணிகளுக்கு விட்டுவிடக்கூடாது என்பதில் சிஎஸ்கே உறுதியாக இருந்தது.

ஏமாற்றிய சிஎஸ்கே

ஏமாற்றிய சிஎஸ்கே

ஆனால் இதே ப்ளானை மற்ற இளம் வீரர்களுக்கு அவர்கள் காட்டவில்லை. தோனிக்கு அடுத்தபடியாக ஃபினிஷராக இருக்க ஷாருக்கானை திட்டமிட்டிருந்தனர். அதன்படி அவரை ஏலம் எடுக்க சிஎஸ்கே அணி கடுமையாக போராடியது. ஆனால் ஏலம் தொகை சற்று அதிகமானவுடனேயே ரூ. 9 கோடிக்கெல்லாம் பஞ்சாப் அணிக்கு தூக்கிக்கொடுத்தது.

மற்றொரு முக்கிய வீரர்

மற்றொரு முக்கிய வீரர்

இதே கதை தான் ராகுல் திவேட்டியா விஷயத்திலும் நடந்தது. அவருக்காக ரூ. 85 கோடி வரை போட்டிப்போட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எடுத்தே தீர வேண்டும் என இருந்தது. ஆனால் கடைசியில் ரூ.9 கோடிக்கு குஜராத் டைட்டேன்ஸ் அணியிடம் விட்டுக்கொடுத்தது.

என்னதான் நடக்கிறது

என்னதான் நடக்கிறது

இப்படி பல முக்கிய வீரர்களை இழந்து வருவதால் சிஎஸ்கேவின் ப்ளான் தான் என்ன என்பது யாருக்கும் புரியவில்லை. அந்த அணியில் தோனி வரவில்லை. ஆனால் காசி விஸ்வநாதன் அவரிடம் தான் தொலைப்பேசியில் கேட்டு ஏலம் எடுக்கிறார் எனக்கூறப்படுகிறது. பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃப்ளெம்மிங் ஏலத்தில் இல்லை, இதனால் அணிக்குள் ஏதேனும் பிரச்சினையா? என்னதான் நடக்கிறது என தெரியாமல் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

Story first published: Saturday, February 12, 2022, 21:03 [IST]
Other articles published on Feb 12, 2022
English summary
CSK Fans are in confusion after the team makes poor strategy in mega auction
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+