
லக்னோ ப்ளான்
கே.எல்.ராகுலை கேப்டனாக நியமித்திருந்த அந்த அணி இந்த மெகா ஏலத்தில் ஓப்பனிங் வீரராக குயிண்டன் டிகாக்கை ஏலம் எடுத்தது. அவரை தொடர்ந்து ஆல்ரவுண்டர் ஜேசன் ஹோல்டர் மற்றும் இளம் வீரர் தீபக் ஹூடாவை ஏலம் எடுத்து சரியான தேர்வுகளுடன் இருந்து வந்தது.

புதிய பிரச்சினை
இந்நிலையில் அந்த அணி திடீரென க்ருணால் பாண்ட்யாவை தங்களது பக்கம் இழுத்து பிரச்சினையை உருவாக்கியுள்ளது. ஏனென்றால் க்ருணால் பாண்ட்யா மற்றும் தீபக் ஹூடா ஆகியோருக்கு ரஞ்சி கோப்பை முதல் ஐபிஎல் வரை இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.

என்ன பின்னணி
கடந்த 2021ம் ஆண்டு சையது முஷ்டக் அலி தொடரின் போது பரோடா அணிக்காக சேர்க்கப்பட்ட தீபக் ஹூடா, கடிதம் ஒன்றை வெளியிட்டார். அதில், கேப்டன் க்ருணால் பாண்ட்யா வேண்டுமென்றே எனக்கு அழுத்தம் தருகிறார். சக வீரர்கள் முன்பும், மற்ற அணி வீரர்கள் முன்பும் மிகவும் மோசமான வார்த்தைகளைக் கூறி திட்டி வருகிறார் என வெளிப்படையாக கடிதம் வெளியிட்டார்.

நீக்கம்
இதனை அறிந்த பரோடா கிரிக்கெட் வாரியம், க்ருணால் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், தீபக் ஹூடாவை அந்த சீசனில் சஸ்பெண்ட் செய்தது. இதனையடுத்து அவர் பரோடா அணியை விட்டே வெளியேறினார். மேலும் ஐபிஎல் தொடரிலும் அவர்களுக்கு இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.

ரசிகர்கள் குழப்பம்
இப்படிப்பட்ட சூழல் இருக்க தான் ஹூடா மற்றும் க்ருணால் பாண்ட்யாவை அணிக்குள் ஒன்றாக சேர்த்துள்ளது லக்னோ அணி. இதனால் அணிக்குள் இனி எப்படிப்பட்ட சூழல் நிலவப்போகிறது என்ற சந்தேகம் உருவாகியுள்ளது,

விமர்சனம்
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள முன்னாள் வீரர் விரேந்தர் சேவாக், லக்னோ அணியில் தீபக் ஹூடா மற்றும் க்ருணால் பாண்ட்யா சிறந்த ஜோடியாக இருப்பார்கள். பரோடா அணியில் பிரிந்த இந்த ஜோடி இனி லக்னோ அணியில் ஒன்று சேரும் என மறைமுகமாக விமர்சித்துள்ளார்.


Click it and Unblock the Notifications