Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐ.பி.எல். மெகா ஏலம்.. வீரர்களின் ஆரம்ப விலை பட்டியல் வெளியீடு..!! முழு விவரம் இதோ..!!

பெங்களூரு: ஐ.பி.எல். மெகா ஏலம் 2022 வீரர்களுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 1214 வீரர்கள் போட்டியிடுகின்றனர்,

இந்த பட்டியலை பி.சி.சி.ஐ. 10 அணிகளுக்கும் வழங்கியுள்ளது. இதில் எந்த வீரர்கள் ஏலத்தில் வேண்டும் என தேர்வு செய்து அணிகள் ஒரு பட்டியலை பி.சி.சி.ஐ.க்கு அனுப்பும்,

அந்த பட்டியல் தான் இறுதிப் பட்டியலாக அமையும் என்று பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது. மெகா ஏலம் வரும் 12 மற்றும் 13ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் 2 கோடி, 1.5 கோடி, 1 கோடி, 50 லட்சம் , 20 லட்சம் பட்டியலில் எந்த முக்கிய வீரர்கள் இடம் பெற்றுள்ளார்கள் என்பதை தற்போது காணலாம்

2 கோடி

2 கோடி

டேவிட் வார்னர், ஸ்ரேயாஸ் ஐயர், அஸ்வின், ரெய்னா, இஷான் கிஷன், சாஹல், தேவ்டட் படிக்கல்,தினேஷ் கார்த்திக், புவனேஸ்வர் குமார், க்ருனால் பாண்டியா, ஹர்ஷல் பட்டேல்,அம்பத்தி ராயுடு, முகமது ஷமி, ஷர்துல் தாக்கூர், ராபின் உத்தப்பா, உமேஷ் யாதவ் , தீபக் சாஹர், டுபிளஸிஸ், பிராவோ, பாட் கம்மின்ஸ், ஸ்மித், இம்ரான் தாஹிர் ஜேசன் ராய், பௌல்ட் உள்ளிட்ட 49 வீரர்கள் 2 கோடி பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

1.5 கோடி பட்டியல்

1.5 கோடி பட்டியல்

ஐ.பி.எல். மெகா ஏலத்தில் ரூ.1,5 கோடி வீரர்கள் பட்டியலில் அமித் மிஷ்ரா, இஷாந்த் சர்மா, வாஷிங்டன் சுந்தர்,ஆரோன் பிஞ்ச், கிறிஸ் லீன்,லயான், கேன் ரிச்சர்ட்சன், பாரிஸ்டோ, அலெக்ஸ் ஹெல்ஸ், இயான் மார்கன், டேவிட் மாலன், ஆடம் மைல்ன், காலின் முன்ரோ,ஜிம்மி நீஷம், கிளன் பிலிப்ஸ்,டிம் சௌதி, காலின் இங்ராம், ஷிம்ரான் ஹெட்மர்,ஜேசன் ஹோல்டர், நிக்கோலஸ் பூரான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

1 கோடி பட்டியல்

1 கோடி பட்டியல்

ரூ. 1 கோடி பட்டியலில் பியூஸ் சாவ்லா, கேதர் ஜாதவ், பிரசித் கிருஷ்ணா, நடராஜன், மணிஷ் பாண்டே, ரஹானே,நிதிஷ் ரானா, சாஹா, குல்தீப் யாதவ், ஜெயந்த் யாதவ், முகமது நபி, ஜேம்ஸ் பால்க்னர், மோசஸ் ஹேன்ரிக்யூஸ், மார்னஸ் லாபஸ்சேங், மேர்டித், ஜோஸ் பிலிப், டார்சி ஷார்ட், ஆன்டிரு டை, டான் லாரன்ஸ், லியான் லிவிங்ஸ்டோன்,டைமல் மில்ஸ்,ஓலி போப், டேவான் கான்வே, கிராண்டேஹோம், மிட்செல் சாட்னர், ஏய்டன் மார்க்ரம், ரூஸ்சோவ், டப்ரைஸ் சாம்ஷி, வெண்டர்டுசன், ஹசரங்கா, ராஸ்டன் சேஸ், ரூதர்ஃபோர்ட். ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

கடைசி நிலை

கடைசி நிலை

இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் தடைக்கு பிறகு முதல் முறையாக ஐ.பி.எல். ஏலத்தில் பங்கேற்க உள்ளார். அவர் தனது ஆரம்ப விலையை 50 லட்சமாக நிர்ணயித்துள்ளார். இதே போன்று மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஆவேஷ் கான் தனது ஆரம்ப விலையை 20 லட்சமாக நிர்ணயித்துள்ளார். இதே போன்று கடந்த சீசனில் 5 கோடிக்கு மேல் சென்ற தமிழக வீரர் ஷாரூக்கான் இம்முறை 20 லட்சத்துக்கே தனது பெயரை பதிவு செய்துள்ளார்.

Story first published: Saturday, January 22, 2022, 18:23 [IST]
Other articles published on Jan 22, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+