Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

புதிய வரலாறு!! காவ்யா - நீட்டா அம்பானி இடையே நடந்த போர்..இஷானுக்கு அடித்த அதிர்ஷ்டம்.. கொட்டிய பணமழை

பெங்களூரு: ஐபிஎல் தொடர் வரலாற்றில் இளம் வீரர் இஷான் கிஷான் புதிய வரலாற்றை நிகழ்த்தி காட்டியுள்ளார்.

2022ம் ஆண்டிற்கான மெகா ஏலம் பெங்களூருவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

காலை முதல் அனுபவ வீரர்களுக்கான ஏலம் விடப்பட்ட நிலையில் இளம் திறமைசாலிகள் தற்போது ஏலம் விடப்பட்டு வருகின்றனர்.

இஷானுக்கு நடந்த போட்டி

இஷானுக்கு நடந்த போட்டி

அந்த வகையில் ரசிகர்கள் அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இளம் வீரர் இஷான் கிஷானுக்கு கடும் போரே நடந்தது. முதலில் சில அணிகள் போட்டிப்போட்ட நிலையில் தொகை அதிகமாக அதிகமாக ஓரம் கட்டின. ஆனால் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஐதராபாத் அணிகள் மட்டும் அவரை விடுவதாக இல்லை என்ற முடிவில் போராடின.

 விடாப்படியாக இருந்த காவ்யா

விடாப்படியாக இருந்த காவ்யா

மும்பை அணிக்காக பல போட்டிகளில் வெற்றிகளை பெற்றுக் கொடுத்தவர் என்பதால் இஷானை எப்படியாவது வாங்கிவிட அந்த அணி முயன்றது. மறுபுறம் காலையில் இருந்து பெரியளவில் வீரர்களை எடுக்காமல் ரூ, 50 கோடிக்கும் மேல் தன்வசம் வைத்திருந்த ஐதராபாத் அணி இஷானை வளைத்துப்போட கடும் போட்டியிட்டது.

தட்டித்தூக்கிய மும்பை

தட்டித்தூக்கிய மும்பை

இதன் விளைவாக இஷான் கிஷானின் விலை ரு. 15 கோடியையும் தாண்டிச் சென்றது. இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணியே இஷானை ரூ. 16.25 கோடிக்கு ஏலம் எடுத்து அசத்தியது. இதன் மூலம், நடப்பு ஏலத்தில் அதிக விலைக்கு சென்ற வீரர் என்ற பெருமையை பெற்றார் இஷான் கிஷன்.

 புது வரலாறு

புது வரலாறு

மேலும் ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச தொகைக்கு சென்ற 2வது இந்திய வீரர் என பெருமையுன் இஷான் கிஷானுக்கு சென்றது. இதற்கு முன்னர் கடந்த 2015ம் ஆண்டு முன்னாள் வீரர் யுவ்ராஜ் சிங்கை ரூ.16.25 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலம் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, February 12, 2022, 18:39 [IST]
Other articles published on Feb 12, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+