Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரகானேவுக்கு கோடிக்கணக்கில் ஏலம்.. ரிஸ்க் எடுத்த முன்னணி அணி.. பெரும் நன்மை உள்ளது - விவரம்!

பெங்களூரு: இந்திய அணி வீரர் அஜிங்கிய ரகானேவை கோடிக்கணக்கில் செலவிட்டு வாங்கியுள்ளது முன்னணி ஐபிஎல் அணி.

ஐபிஎல் மெகா ஏலத்தின் முதல் நாள் விறுவிறுப்பாக எதிர்பாராத திருப்பங்களுடன் சென்ற நிலையில் 2வது நாள் ஏலம் தொடங்கியது.

இன்றைய ஏலத்தின் தொடக்கமே அனைத்து அணிகளுக்கும் பெரும் அதிர்ச்சிக் கொடுக்கக்கூடிய சம்பவம் நடந்தது.

தொடக்கமே ஆச்சரியம்

தொடக்கமே ஆச்சரியம்

தொடக்கத்தில் அனுபவ வீரர்கள் ஏலம் விடப்பட்டனர். அந்த வரிசையில் இந்திய அணி வீரர் அஜிங்கியா ரகானே 2வதாக களமிறக்கப்பட்டார். தொடக்கத்தில் எந்த அணியும் இவர் மீது ஆர்வம் காட்டவில்லை. இதற்கு காரணம் ரகானேவின் தற்போதைய மோசமான ஃபார்ம் தான். இந்தியாவின் ஒருநாள் அணி மற்றும் டி20 போட்டிகளில் வாய்ப்பே கிடைக்காமல் உள்ள ரகானே, தற்போது டெஸ்ட் அணியில் இருந்து வெளியேற்றப்பட இருக்கிறார்.

ரிஸ்க் எடுத்த கொல்கத்தா

ரிஸ்க் எடுத்த கொல்கத்தா

இதனையடுத்து நீண்ட நாட்களாக ரகானே விளையாடிய ராஜஸ்தான் அணிக்கூட துளியளவில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் கொல்கத்தா அணி மட்டும் தைரியமாக முன் வந்து ரகானேவை ஏலம் கேட்டது. இதனால் அடிப்படை தொகையான ரூ. 1 கோடிக்கு ரகானே வாங்கப்பட்டார். இது அந்த அணிக்கு நல்ல விஷயம் என்று தான் கூற வேண்டும்.

பலன் உள்ளது

பலன் உள்ளது

ஐபிஎல் தொடரில் ரெய்னாவை போன்றே சிறந்த அனுபவம் உள்ளவர் ரகானே. இவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் ஐபிஎல் தொடரில் ஓரளவிற்கு சிறப்பாகவே விளையாடியுள்ளார். இதுவரை ஐபிஎல்-ல் 151 போட்டிகளில் விளையாடி 3941 ரன்களை குவித்துள்ளார். இவரின் சராசரி இன்னும் 31.53 என உள்ளது..

கொல்கத்தாவின் தேவை

கொல்கத்தாவின் தேவை

கொல்கத்தா அணிக்கு தற்போது ஓப்பனிங் வீரர் தேவைப்படுகிறார். ஒருபுறம் வெங்கடேஷ் ஐயர் அதிரடி காட்ட, மற்றொரு புறம் நிதானமாக பார்ட்னர்ஷிப் கொடுக்க வேண்டும். அதற்கு சிறந்த தேர்வாக ரகானே இருப்பார். மேலும் ஸ்ரேயாஸுக்கு கேப்டன்சியிலும் உதவுவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

Story first published: Sunday, February 13, 2022, 13:31 [IST]
Other articles published on Feb 13, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+