Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தமிழக வீரர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்.. மெகா ஏலத்தில் 14 பேருக்கு வாய்ப்பு.. எந்தெந்த அணிகள் எடுத்தன?

பெங்களூரு: ஐபிஎல் 2022 தொடரில் இந்த முறை தமிழக வீரர்கள் ஓரளவிற்கு வாய்ப்பு பெறவுள்ளனர்.

ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் மெகா ஏலம் பெங்களூருவில் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது.

இந்த முறை அனுபவமிக்க வீரர்களை விட இளம் வீரர்களுக்கு தான் அனைத்து அணிகளும் முன்னுரிமை கொடுத்தன. அதுவும், சர்வதேச போட்டிகளில் விளையாடாத இளம் வீரர்களுக்கு பண மழை என்று தான் கூற வேண்டும்.

மொத்த தமிழக வீரர்கள்

மொத்த தமிழக வீரர்கள்

இந்த இளம் வீரர்களின் பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த வீரர்களுக்கும் சிறப்பான வாய்ப்புகள் கிடைத்துள்ளன. மெகா ஏலத்திற்காக மொத்தமாக 30 வீரர்கள் தேர்வாகியிருந்தனர். இதில் இருந்து 14 வீரர்கள் ஐபிஎல் அணிகளால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இந்த பட்டியலில் 2 வீரர்கள் புதிதாக ஐபிஎல் தொடருக்குள் காலடி எடுத்து வைக்கின்றனர்.

 சுவாரஸ்ய சம்பவம்

சுவாரஸ்ய சம்பவம்

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் யார்க்கர் கிங் டி.நடராஜனை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி மீண்டும் ரூ. 4 கோடிக்கு ஏலம் எடுத்தது. இதே போல வாஷிங்டன் சுந்தரையும் ரூ.8.75 கோடிக்கு ஐதராபாத் அணியே வாங்கியது. இவரை வாங்கியவுடன் அணி உரிமையாளர் காவ்யா மாறன் மகிழ்ச்சியில் பொங்கிய வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

தமிழக வீரர்கள் பட்டியல்

தமிழக வீரர்கள் பட்டியல்

ரவிச்சந்திரன் அஸ்வின் (ரூ.5 கோடி ராஜஸ்தான் ராயல்ஸ் )

முருகன் அஸ்வின் (ரூ.1.60 கோடி,மும்பை இந்தியன்ஸ்)

தினேஷ் கார்த்திக் (ரூ.5.50 கோடி, பெங்களூரு)

சாய் கிஷோர் ( ரூ.3 கோடி குஜராத் டைட்டான்ஸ்)

சாய் சுதர்சன் ( ரூ. 20 லட்சம் குஜராத் டைட்டான்ஸ்)

இந்திரஜித் பாபா (ரூ.20 லட்சம் கொல்கத்தா)

சஞ்சய் யாதவ் (ரூ.50 லட்சம் மும்பை இந்தியன்ஸ்)

ஹரி நிஷாந்த் (ரூ.20 லட்சம், சிஎஸ்கே)

என்.ஜகதீசன் (ரூ.20 லட்சம், சிஎஸ்கே)

டி.நடராஜன் (ரூ.4 கோடி, ஐதராபாத்)

வாஷிங்டன் சுந்தர் (ரூ. 8.75 கோடி, ஐதராபாத்)

விஜய் சங்கர் (ரூ.1.40 கோடி, குஜராத் டைட்டான்ஸ்)

வருண் சக்கரவர்த்தி, ஏற்கனவே தக்கவைக்கப்பட்டார் (ரூ. 8 கோடி, கொல்கத்தா)

ஷாருக்கான் (ரூ.9 கோடி, பஞ்சாப் கிங்ஸ்)

2 புதுமுக வீரர்கள்

2 புதுமுக வீரர்கள்

இந்த பட்டியலில் உள்ள 12 பேர் ஏற்கனவே ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவம் உள்ள நிலையில் இந்திரஜித் பாபா, சாய் கிஷோர் ஆகிய இருவரும் முதல் முறையாக களம் காணவுள்ளனர். உள்நாட்டு தொடர்களில் சிறப்பாக விளையாடிய இவர்களுக்கு ப்ளேயிங் 11ல் வாய்ப்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Story first published: Monday, February 14, 2022, 17:26 [IST]
Other articles published on Feb 14, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+