Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL Mega Auction 2022- சி.எஸ்.கே. வீரர்களுக்கு 2 கோடி ரூபாய்.. 49 நட்சத்திர வீரர்களின் விலை பட்டியல்

மும்பை: ஐ.பி.எல். 2022ஆம் ஆண்டிற்கான மெகா ஏலம் அடுத்த மாதம் 12 மற்றும் 13ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற உள்ளது.

Recommended Video

IPL Mega Auction 2022: List Of Players With Rs 2 Crore As Base Price In IPL Mega Auction

ஏலம் நெருங்க, நெருங்க அதற்கான பணிகள் சூடிபிடித்துள்ளது. மெகா ஏலத்தில் பங்கேற்க 1214 வீரர்கள் முன்பதிவு செயதுள்ளனர்.

இதில் 270 வீரர்கள் சர்வதேச போட்டியில் விளையாடியவர்கள், 312 வீரர்கள் உள்ளூர் போட்டியில் விளையாடியவர்கள் 41 பேர் கத்துக்குட்டி அணிகளை சேர்ந்தவர்கள்

2 கோடி பட்டியல்

2 கோடி பட்டியல்

கடந்த ஏலங்களை போல் இந்த ஏலத்திலும் நட்சத்திர வீரர்களுக்கான அதிகபட்ச தொகையாக 2 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் அஸ்வின், ரெய்னா, ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன்,சாஹல், தேவ்தத் படிக்கல்,தினேஷ் கார்த்திக், புவனேஸ்வர் குமார், க்ருனால் பாண்டியா, ஹர்ஷல் பட்டேல்,அம்பத்தி ராயுடு, முகமது ஷமி, ஷர்துல் தாக்கூர், ராபின் உத்தப்பா, உமேஷ் யாதவ் , தீபக் சாஹர் என 17 இந்திய சீனியர்கள் பங்கேற்றுள்ளனர்

வெளிநாட்டு வீரர்கள்

வெளிநாட்டு வீரர்கள்

அதிகபட்ச தொகையான 2 கோடி ரூபாய் வீரர்கள் பட்டியலில் வெளிநாட்டு வீரர்கள் 32 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில் டேவிட் வார்னர்,பாட் கம்மின்ஸ், ஜாஸ் ஹேசல்வுட்,மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், மேத்தீவ் வெட், அடாம் சாம்பா,முஜிப் சார்டன்,ஆஸ்டன் அகார், நாதன் குட்டர் நைல், ஷகிபுல் ஹசன், முஸ்தாபிசுர் ரஹ்மான், சாம் பில்லிங்ஸ், ஷகிப் மகமுத், கிறிஸ் ஜோர்டன், கிரைக் ஓவர் டன்

32 வீரர்கள்

32 வீரர்கள்

ஆதில் ரஷித், ஜேசன் ராய், ஜேம்ஸ் வின்ஸ், டேவிட் வில்லி, மார்க் வுட், டிரெண்ட் பௌல்ட், லுக்கி பெகுர்சன், குயின்டன் டி காக், மெர்சண்ட், டுபிளஸி, ரபாடா, இம்ரான் தாஹிர், ஃபெபியன் ஆலன், டுவைன் பிராவோ, எவன் லீவிஸ், ஓடியன் ஸ்மித் ஆகியோர் தங்களது ஆரம்ப விலையை 2 கோடி ரூபாயாக நிர்ணயித்துள்ளனர்.

பங்கேற்காத வீரர்கள்

பங்கேற்காத வீரர்கள்

இந்த பட்டியலில் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், இங்கிலாந்து வீரர்கள் சாம் கரன், பென் ஸ்டோக்ஸ், ஆர்சர் , கிறிஸ் ஓக்ஸ் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அதிரடி வீரர் கிறிஸ் கெயில் பெயர் இடம்பெறவில்லை. இதனால், இவர்கள் யாரும் இந்த ஐ.பி.எல். தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என தெரிகிறது

காட்டில் பண மழை

காட்டில் பண மழை

இந்த பட்டியலில் வார்னர், ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், மிட்செல் மார்ஷ் ஆகியோர் அதிக விலைக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் முறையாக ஐ.பி.எல். ஏலத்தில் பங்கேற்றுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் ஓடியன் ஸ்மித் தனது ஆரம்ப விலையை 2 கோடி ரூபாய் நிர்ணயித்துள்ளார். ஆனால் தமிழக வீரர் ஷாரூக்கான் தனது ஆரம்ப விலையை 20 லட்சமாக நிர்ணயித்துள்ளார்.

Story first published: Saturday, January 22, 2022, 18:16 [IST]
Other articles published on Jan 22, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+