Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“அதுவே இல்லாம என்ன செய்றீங்க” ஏலத்தில் முக்கிய விஷயத்தை தவறவிட்ட மும்பை அணி.. ஏமாந்த ரசிகர்கள்!

பெங்களூரு: ஐபிஎல் மெகா ஏலத்தின் முதல் நாளில் பல முன்னணி வீரர்கள் குறைந்த விலைக்கு ஏலம் போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால் இன்று முன்னணி வீரர்கள் ஏலமே போகாமல் உள்ளனர். குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணியின் மவுனம் பெரிய சஸ்பென்சை ஏற்படுத்தியிருக்கிறது.

முதல் நாள் ஏலத்தில் மும்பை அணி வெறும் 4 வீரர்களை மட்டுமே எடுத்திருந்தது. அதிலும் பேட்ஸ்மேன்கள் மட்டுமே முன்னணி வீரர்களாக இருந்தனர். இன்றாவது ஏதேனும் பவுலர்களில் சிறந்தவர்களை எடுக்கும் என்று பார்த்தால் ரூ. 20 கோடிக்கும் மேல் பணத்தை வைத்துக்கொண்டு மவுனமாக உள்ளது.

அணியின் பலம்

அணியின் பலம்

மும்பை அணிக்கு கடந்த சீசன்களில் இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ராவுடன் சேர்ந்து நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் சிறப்பாக வீசினார். இந்த ஜோடியின் பவுலிங்கால் தான் எப்படிபட்ட ஸ்கோரையும் மும்பை அணியால் கட்டுப்படுத்த முடிந்தது. குறிப்பாக இந்த பவுலிங் ஜோடியிடம் சென்னை அணியே தோல்வியை சந்தித்துள்ளது.

ஆர்வம் காட்டவில்லை

ஆர்வம் காட்டவில்லை

இந்நிலையில் அயல்நாட்டு வேகப்பந்துவீச்சாளர்கள் மீது துளிக்கூட ஆர்வம் காட்டாமல் உள்ளது மும்பை அணி. ஏற்கனவே ட்ரெண்ட் போலட்-ஐ இழந்துவிட்டது. தென்னாப்பிரிக்காவின் முன்னணி வீரர் லுங்கி இங்கிடி, ஆஸ்திரேலிய வீரர் கோல்டர் நைல் ஆகியோர் அடிப்படை தொகைக்கே கிடைத்தனர். எனினும் அவர்களை கண்டுக்கொள்ளவில்லை.

முக்கிய விஷயம்

முக்கிய விஷயம்

இதனையெல்லாம் விட தென்னாப்பிரிக்க வீரர் மார்கோ ஜான்சனை இழந்தது தான் பெரும் அதிர்ச்சி. தொடர்ச்சியாக அந்த வீரரை பின் தொடர்ந்து மும்பை அணி கடந்த 2 சீசன்களாக பயன்படுத்தி வந்தது. இந்தாண்டும் அவரை எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வேறு ஒரு அணிக்கு தூக்கி கொடுத்துவிட்டது. இதனால் மும்பை அணி அயல்நாட்டு பவுலரை ஏலம் எடுக்குமா இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

என்ன தான் திட்டம்

என்ன தான் திட்டம்

மும்பை அணியின் மவுனத்திற்கு ஆர்ச்சர் கூட காரணமாக இருக்கலாம். இங்கிலாந்தின் பெஸ்ட் பவுலரான ஆர்ச்சர், ஜஸ்பிரித் பும்ரா, உனத்கட் கூட்டணி சேர்ந்தால் சிறப்பாக இருக்கும். எனவே இதனை தான் மும்பை அணியும் மனதில் வைத்துள்ளது எனத் தெரிகிறது.

Story first published: Sunday, February 13, 2022, 15:43 [IST]
Other articles published on Feb 13, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+