
எவ்வளவு தொகை உள்ளது
சிஎஸ்கே அணி தற்போது வரை ரவீந்திர ஜடேஜா ( ரூ.16 கோடி), தோனி ( ரூ.12 கோடி ), மொயீன் அலி ( ரூ.8 கோடி), ருதுராஜ் ( ரூ.6 கோடி) எனத்தக்கவைத்துள்ளது. அந்த அணிக்கு மெகா ஏலத்திற்காக ரூ. 48 கோடி மீதமுள்ளது. இதனை வைத்து அனைத்து துறைகளுக்கும் தேவையான வீரர்களை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளது.

ஓப்பனர்ஸ்
சென்னை அணிக்கு கடந்த 2 சீசன்களாக ருதுராஜ் கெயிக்வாட் - டூப்ளசிஸ் ஜோடி சிறப்பான தொடக்கம் கொடுத்தது. கடந்த சீசனில் டூப்ளசிஸ் 2வது அதிகபட்ச ஸ்கோர் அடித்திருந்தார். எனவே அவரையே மீண்டும் ஓப்பனிங்கிற்கு குறிவைக்கும். இதே போல ராபின் உத்தப்பாவும் ஓப்பனிங்கிற்கு மாற்று வீரராக இருப்பார். மிடில் ஆர்டரிலும் களமிறங்கி சிறப்பாக விளையாடுவதால் இவரையும் ஏலம் எடுக்கும்.

சுழற்பந்துவீச்சாளர்கள்
சிஎஸ்கே அணிக்கு ஜடேஜாவை தவிர்த்து மேலும் 2 அனுபவ ஸ்பின்னர்கள் தேவை. அதனை மனதில் வைத்து ரவிச்சந்திரன் அஸ்வினை மீண்டும் அணிக்குள் எடுக்கவுள்ளது. இதே போல மிட்செல் சாண்டனருக்கும் குறிவைக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவருக்குமே இன்னும் 5 ஆண்டுகள் வரை கிரிக்கெட் ஆட முடியும் என்பதால் வயது எந்தவித பிரச்சினையும் இல்லை.

வேகப்பந்துவீச்சு
வேகப்பந்துவீச்சை பொறுத்தவரை பழைய அணியில் இருந்து பெரிய மாற்றங்களை செய்ய சிஎஸ்கே விரும்பவில்லை. அதன்படி ஏற்கனவே சிஎஸ்கேவுக்கு விளையாஇட்ய ஹாசல்வுட், லுங்கி நெகிடி, மற்றும் தீபக் சஹார் ஆகியோர் ஏலம் எடுக்கப்படவுள்ளனர். இவர்களுடன் சேர்த்து மார்க் வுட் கூடுதல் பலம் தருவார் என்பதால் அவரையும் குறிவைத்துள்ளார் தோனி.

ஆல்ரவுண்டர்கள்
மெகா ஏலத்தில் இந்த முறை ஆல்ரவுண்டர்களுக்கு அதிக போட்டி இருக்கும் என்பதால், பழைய வீரரான ஷர்துல் தாக்கூரையே அதிக தொகைக்கு எடுத்து வர சிஸ்கே திட்டமிட்டுள்ளது. சமீப காலமாக அவர் பேட்டிங் மற்றும் பவுலிங் என சர்வதேச கிரிக்கெட்டில் கலக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முதன்மை தேர்வுகளுக்கு பின்னர் தான் மற்ற வீரர்கள் மீது கவனம் செலுத்தவுள்ளனர்.


Click it and Unblock the Notifications