பேட்டிங்கில் ஷிகர் தவான்.. பவுலிங்கில் தென்னாப்பிரிக்க புயல்.. மெகா ஏலத்தில் கெத்து காட்டும் பஞ்சாப்
பெங்களூரு: தென்னாப்பிரிக்க வீரர் ககிஸ்கோ ரபாடாவை கடும் போராட்டத்திற்கு இடையே ஏலம் எடுத்துள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி.
ஐபிஎல் மெகா ஏலம் பெங்களூருவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஸ்டார் வீரர்கள் முதலில் ஏலம் விடப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் ககிஸ்கோ ரபாடாவும் இந்த பட்டியலில் இடம்பெற்று ஏலம் விடப்பட்டார்.

ரபாடா
ரூ.2 கோடி என்ற அடிப்படை தொகையுடன் விடப்பட்ட ஏலத்தில் ரபாடாவை வாங்க ஒவ்வொரு அணியும் கடும் போட்டி போட்டன. குறிப்பாக ராஜஸ்தான், கொல்கத்தா, பஞ்சாப் கிங்ஸ் அணிகளும் அதிக ஆர்வம் காட்டி வந்தன. எனினும் சிஎஸ்கே அணி அவரை பெரியளவில் கண்டுக்கொள்ளவில்லை.

இறுதியில் வெற்றி
ரபாடாவின் தொகை ரூ.8 கோடிக்கு கடந்து மேலே சென்ற போது, சில அணிகள் பின் வாங்கின. இறுதியில் பஞ்சாப் கிங்ஸ் அணி ரபாடாவை ரூ. 9.25 கோடிக்கு ஏலம் எடுத்தது. அந்த அணி இந்த ஏலத்தில் ஏற்கனவே ஷிகர் தவானை ரூ.8.25 கோடிக்கு ஏலம் எடுத்திருந்த நிலையில் ரபாடாவை ஏலம் எடுத்துள்ளதன் மூலம் பலமான அணியாக உருவெடுத்துள்ளது.

ஏமாற்றிய டெல்லி
கடந்த சீசனில் டெல்லி அணிக்காக விளையாடிய ரபாடா, முன்னணி வீரராக இருந்து வந்தார். ஆனால் மெகா ஏல விதிமுறைகளால் வேறு வழியின்றி டெல்லி அணி கழட்டிவிட்டது. ஆனால் இந்த முறை அவரை எப்படியாவது ஏலம் எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால் அவரை ஏலம் எடுத்ததன் மூலம் பஞ்சாப் அணிக்கு பந்துவீச்சில் கூடுதல் பலம் கூடியுள்ளது.

புள்ளிவிவரம்
ஐபிஎல் தொடரில் இதுவரை 50 போட்டிகளில் விளையாடியுள்ள ரபாடா, 76 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அவரின் எகானமி 8.21 மட்டுமே ஆகும். டெத் ஓவர்களில் முக்கிய பார்ட்னர்ஷிப்களை பிரிக்கும் திறமை கொண்டதால் பஞ்சாப் அணிக்கு கடந்த சீசன்களில் இருந்த பிரச்சினை இனி தீரும்


Click it and Unblock the Notifications