“ரூ.1.5 கோடியெல்லாம் பத்தாது”.. சிஎஸ்கேவுக்கு எச்சரிக்கை விடுத்த அஸ்வின்.. மெகா ஏலத்திற்கு முன்பேவா?
பெங்களூரு: மெகா ஏலத்தையொட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஐபிஎல் மெகா ஏலம் வரும் பிப். 12 மற்றும் 13ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் திட்டமிட்டு வருகின்றன.
நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வழக்கமான ஃபார்முலாவாக பழைய வீரர்களையே ஏலத்தில் எடுக்க திட்டமிட்டுள்ளது.

அஸ்வின் விடுத்த எச்சரிக்கை
அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கடந்த சீசனில் சிறப்பாக செயல்பட்ட டூப்ளசிஸ், உத்தப்பா, அம்பத்தி ராயுடு, தீபக் சஹார், ஷர்துல் தாக்கூர் என அனைவரையும் மீண்டும் ஏலம் எடுக்க தோனி பரிந்துரைத்துள்ளார். இந்நிலையில் இதில் இருந்து டூப்ளசிஸை எடுப்பதில் மட்டும் கவனம் தேவை என அஸ்வின் எச்சரித்துள்ளார்.

காரணம் என்ன
இதுகுறித்து பேசியுள்ள அவர், டூப்ளசிஸ் சென்னை அணிக்கு சிறப்பாக செயல்பட்டவர். கடந்த முறை டூப்ளசிஸை வெறும் ரூ.15 கோடிக்கு ஏலம் வாங்கிக் கொண்டது சிஎஸ்கே அணி. ஆனால் இந்த முறை அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என நினைக்கிறேன். அவரை வாங்க வேண்டும் என நினைத்தால் சிஎஸ்கே அதிக தொகைகளை செலவிட தயாராக இருக்க வேண்டும். ரசிகர்களும் அதை தான் விரும்புகின்றனர் என தெரிவித்துள்ளார்.

காத்திருக்கும் 3 அணிகள்
டூப்ளசிஸுக்கு இந்த முறை அதிக போட்டிகள் இருக்கும். பல்வேறு அணிகளுக்கும் சிறந்த ஓப்பனிங் வீரர் தேவைப்படுகின்றனர். குறிப்பாக ஆர்சிபி, கொல்கத்தா அணிகள் டூப்ளசிஸை கேப்டனாக நியமிக்கவும் முடிவெடுத்துள்ளது. இதனால் ரூ.15 கோடி வரை அவர் ஏலம் போவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அட்டகாச ரெக்கார்ட்
கடந்த சீசனில் ருதுராஜ் கெயிக்வாட்டுடன் ஓப்பனிங் ஜோடி சேர்ந்து விளையாடிய டூப்ளசிஸ், தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 2வது இடம் பிடித்தார். மொத்தம் 16 போட்டிகளில் விளையாடிய அவர் 633 ரன்களை குவித்தார். இதில் 6 அரைசதங்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications