Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் மெகா ஏலம் 2வது நாள்.. அணிகளிடம் மீதமுள்ள தொகை?.. எத்தனை வீரர்கள் உள்ளனர் - முழு விவரங்கள்!

பெங்களூரு: ஐபிஎல் மெகா ஏலத்தின் முதல் நாள் எதிர்பாராத திருப்பங்களுடன் முடிவடைந்ததால் சில அணிகளுக்கு சிக்கல் உருவாகியுள்ளது.

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ஐபிஎல் மெகா ஏலத்தின் நேற்றைய நாளில் முன்னணி வீரர்களை விட இளம் வீரர்களுக்கு போட்டி அதிகப்படியாக இருந்தது.

சென்னை அணியை தவிர்த்து மற்ற அணிகளும் எதிர்காலத்தை மனதில் வைத்து இளம் படையை உருவாக்கி வருகின்றனர்.

சிஎஸ்கே திட்டம்

சிஎஸ்கே திட்டம்

சிஎஸ்கே அணி நேற்றைய நாளின் தொடக்கத்தில் அமைதி காத்த நிலையில் திடீரென பழைய அணியையே மீண்டும் எடுக்கத்தொடங்கியது. அதன்படி ராபின் உத்தப்பா, பிராவோ, அம்பத்தி ராயுடு, தீபக் சஹார் என பழைய அணியை மீண்டும் எடுத்தது. இவர்களுடன் சேர்த்து சில வீரர்கள் மட்டும் புதிதாக வாய்ப்பு பெற்றுள்ளனர்.

வெற்றிகரமான அணிகள்

வெற்றிகரமான அணிகள்

டெல்லி அணி முக்கிய வீரர்கள் அனைவரின் மீதும் குறிவைத்தது. அதில பல சிறந்த வீரர்கள் மிகக்குறைந்த விலைக்கே டெல்லி அணிக்கு கிடைத்தது. இதன் பின்னர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் பல வீரர்களுக்கு போட்டிப்போட்ட நிலையில் சர்வதேச அனுபவம் இல்லாத வீரர்கள் பலரை இந்த முறை தூக்கியுள்ளது.

 எதிர்பாராத வீரர்கள்

எதிர்பாராத வீரர்கள்

நேற்றைய நாளின் முடிவில் யாரும் எதிர்பாராத விதமாக இஷான் கிஷானை ரூ. 15.25 கோடிக்கு மும்பை அணியும், தீபக் சஹாரை ரூ.14 கோடிக்கு சென்னையும், ஸ்ரேயாஸ் ஐயர் ரூ.12.25 கோடி, ஷர்துல் தாக்கூர் ரூ.10.75 கோடிக்கு டெல்லி அணி, ஹர்ஷல் பட்டேல் ரூ.10.45 கோடிக்கு ஆர்சிபி அணிக்கும் ஏலம் சென்றனர்.

அணிகளுக்கு மீதம் உள்ள தொகை மற்றும் வைத்துள்ள வீரர்கள்

அணிகளுக்கு மீதம் உள்ள தொகை மற்றும் வைத்துள்ள வீரர்கள்

  • சென்னை - ரூ.20 கோடியே 45 லட்சம், 10 வீரர்கள்
  • டெல்லி - ரூ. 16 கோடியே, 50 லட்சம், 13 வீரர்கள்
  • குஜராத் - ரூ.18 கோடியே 85 லட்சம், 10 வீரர்கள்
  • கொல்கத்தா - ரூ.12 கோடியே 65 லட்சம், 9 வீரர்கள்
  • லக்னோ - ரூ.6 கோடியே 90 லட்சம், 11 வீரர்கள்
  • மும்பை - ரூ.27 கோடியே 85 லட்சம், 8 வீரர்கள்
  • பஞ்சாப் - ரூ. 28 கோடியே 65 லட்சம், 11 வீரர்கள்
  • ராஜஸ்தான் - ரூ.12 கோடியே 15 லட்சம், 11 வீரர்கள்
  • பெங்களூரு - ரூ.9 கோடியே 25 லட்சம், 11 வீரர்கள்
  • ஐதராபாத் - ரூ.20 கோடியே 15 லட்சம், 13 வீரர்கள்
Story first published: Sunday, February 13, 2022, 9:45 [IST]
Other articles published on Feb 13, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+