
புதியதாக வீரர்கள்
முதலில் 590 வீரர்கள் மட்டுமே ஐபிஎல் மெகா ஏலத்தில் தங்களது பெயரை பதிவு செய்தனர். தற்போது சில அணிகள் விடுத்த கோரிக்கையை ஏற்ற பிசிசிஐ, அண்டர் 19 உலககோப்பையில் விளையாடி கலக்கிய சில வீரர்களை ஏலத்தில் பங்கேற்க அனுமதி அளித்துள்ளது. இதில் அடுத்த தோனி என்ற அழைக்கப்படும் தினேஷ் பானா, இடதுகை வேகப்பந்துவீச்சாளர் ரவிகுமார் என மொத்தம் 10 வீரர்களை பி.சி.சி.ஐ. ஏலத்தில் பங்கேற்க அனுமதி அளித்துள்ளது.

விலையில் மாற்றம்
இதன் மூலம் தற்போது ஏலத்தில் 600 வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்திய அணியில் அறிமுகமானதால் தீபக் ஹூடாவின் ஆரம்ப விலை 40 லட்சம் ருபாயிலிருந்து 75 லட்சமாக உயர்ந்துள்ளது. இதே போன்று மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி ஆல் ரவுண்டர் ஓடியன் ஸ்மித் தனது விலையை ஒரு கோடி ரூபாயிலிருந்து ஒன்றரை கோடி ரூபாய் வரை உயர்த்தியுள்ளார்.

ஏலம் விதி
ஏலத்தில் ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் 18 வீரர்களையும், அதிகபட்சம் 25 வீரர்களையும் தேர்வு செய்யலாம். அதிகபட்சமாக ஒவ்வொரு அணியிலும் 8 வெளிநாட்டு வீரர்கள் தான் தேர்வு செய்யப்படலாம். அனுமதிக்கப்பட்ட 90 கோடியில் ஒவ்வோரு அணியும் குறைந்தபட்சம் 67 புள்ளி 5 கோடியை செலவு செய்ய வேண்டும்.

ஆர்.டி.எம். கார்ட்
வீரர்களின் ஆரம்ப விலை அதிகபட்சமாக 2 கோடி ரூபாயாகவும், குறைந்தபட்சம் 20 லட்சம் ரூபாயாவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை தவிர 30 லட்சம், 40 லட்சம், 50 லட்சம், 75 லட்சம், 1 கோடி, ஒன்றரை கோடி என விரர்கள் பட்டியல் பிரிக்கப்பட்டுள்ளது. 600 வீரர்களும் மொத்தம் 62 செட்களாக பிரிக்கப்பட்டுள்ளனர். இம்முறை அணியில் ஏற்கனவே விளையாடும் வீரரை ஏலத்தில் தேர்ந்து எடுக்கப்படும் RTM எனப்படும் RIGHT TO MATCH CARD இம்முறை இல்லை.
Recommended Video

முதல் நாள் விவரம்
ஐபிஎல் மெகா ஏலத்தில் முதல் நாள் வெறும் 97 வீரர்கள் மட்டுமே பங்கேற்க உள்ளனர். மீதமுள்ள 98 லிருந்து 162 வீரர்கள் வரை ஞாயிற்றுகிழமை முதல் பாதியில் நடைபெறுகிறது. எஞ்சியுள்ள வீரர்கள் அனைவரும் ஏலத்தில் பங்கேற்க மாட்டார்கள். ஆம் எஞ்சியுள்ள வீரர்களில் யார் தேவையோ, அவர்களை மட்டும் அணி நிர்வாகம் தேர்வு செய்து வழங்கினால் மட்டுமே வீரர்களின் பெயர் ஏல மேடைக்கு வரும். ஐபிஎல் மெகா ஏலம் மதியம் 12 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பு செய்யப்படும்.


Click it and Unblock the Notifications











