ஐபிஎல் மெகா ஏலத்தில் பெரும் அதிர்ச்சி.. விலை போகாத சின்ன தல ரெய்னா. ஸ்மித் ..!! ரசிகர்கள் ஏமாற்றம்
பெங்களூரு: ஐபில் மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர விரர் சுரேஷ் ரெய்னாவை எந்த அணியும் விலை கேட்கவில்லை.
ஒரு காலத்தில் ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன் அடித்த வீரர் என்ற பெருமையை கோலிக்கு முன்னால் பெற்று இருந்தார்.
இதனையடுத்து சுரேஷ் ரெய்னா பெயர் வந்ததும் அரங்கில் பெரும் மௌனம் நிரம்பியது. சென்னை அணி கையை தூக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ரெய்னா செயல்பாடு
ஐபிஎல் வரலாற்றில் 205 போட்டியில் விளையாடிய ரெய்னா 5528 ரன்கள் அடித்து இருந்தார். ரெய்னா முதல் 10 சீசனில் தொடர்ந்து 300 ரன்களை அடித்த ஒரே வீரர் என்ற பெருமையையும் பெற்றவர். ரெய்னா கில்லியான ஃபீல்டர், சுழற்பந்தும் வீச தெரியும்.

விலை போகவில்லை
ஆனால் சென்னை அணி கை கொடுக்கவில்லை. சரி புதிய அணிகள் ஏதாவது கை தூக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அதுவும் நடக்கவில்லை. இதனையடுத்து ரெய்னா விலை போகவில்லை என்று அறிவிக்கப்பட்டார். இதனால் ரெய்னா ரசிகர்கள் கடும் ஏமாற்றம் அடைந்தனர்.

ரசிகர்கள் ஏமாற்றம்
ரெய்னா இன்று விலை போகவில்லை என்றாலும், நாளை மீண்டும் விலை போகாத வீரர்களுக்கு என்று தனியே ஏலம் நடத்தப்படும். இதில் ஏதாவது ஒரு அணி ரெய்னாவை வாங்கலாம். ஆனால் ரெய்னாவுக்கு இந்த நிலைலமை வந்திருக்க கூடாது என்று ரசிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

ஸ்மித் விலை போகவில்லை
இதே போன்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்மித்தும் இன்று விலை போகவில்லை. ஆரம்ப விலை 2 கோடியாக ஸ்மித்துக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அவரை ஏலத்தில் எடுக்க எந்த அணியும் ஆர்வம் காட்டவில்லை. இதனால் ஸ்மித்தும் விலை போகவில்லை என்று அறிவிக்கப்பட்டார்


Click it and Unblock the Notifications