For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

BLACKLIST செய்யப்பட்டாரா ரெய்னா..? 2வது முறை ஏலம் மேடைக்கே வராத சோகம்..! துரோகம் இழைத்ததா சிஎஸ்கே?

பெங்களூரு: தமிழகத்தில் தோனிக்கு பிறகு அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர் ரெய்னா. ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக பல போட்டிகளை வென்று தந்தவர்.

2016ஆம் ஆண்டு வரை ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை அடித்த வீரர் ரெய்னா. செம ஃபில்டர் மற்றும் சுழற்பந்தையும் வீச கூடியவர்.

ஒரு காலத்தில் சென்னை அணியின் அடுத்த கேப்டனாக அறியப்பட்டவர் ரெய்னா. தோனி இல்லை என்றால் கேப்டனாக ரெய்னா தான் செயல்படுவார்.

ரெய்னா நடவடிக்கை

ரெய்னா நடவடிக்கை

இந்த நிலையில், தோனி 2020ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற போது, தாமும் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 2020ஆம் ஆண்டு ஐபிஎல் சீசன் போது சென்னை அணியில் இருந்து ரெய்னா திடீரென்று வெளியேறினார். இது சென்னை அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

பெஞ்சில் அமர்ந்தார்

பெஞ்சில் அமர்ந்தார்

அந்த சீசனில் சென்னை அணி 7வது இடத்தில் தான் புள்ளி பட்டியலை பிடித்தது. இருப்பினும் கடந்த சீசனிலும் ரெய்னா சென்னை அணியில் இடம் பிடித்தார். ஆனால் ரெய்னா தனது பழைய பேட்டிங் பார்மை இழந்தார். இதனால் ரெய்னா அணியிலிருந்து வெளியேற்றப்பட்டு பெஞ்சில் அமர வைக்கப்பட்டார்.

மறுஏலம்

மறுஏலம்

இதே போன்று இந்த சீசனுக்கு ரெய்னாவை சிஎஸ்கே தக்கவைக்கவில்லை. இதனால் ரெய்னாவை மற்ற அணிகள் கேப்டனாக நியமிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரெய்னாவை நேற்றைய ஏலத்தில் எந்த அணியும் எடுக்கவில்லை. இதனால் விலைபோகாத வீரர்களை தேர்வு செய்து அணிகள் ஏலம் மேற்கொள்ள கோரிக்கை வைத்தால், 2வது முறையாக ஏலம் விடப்படும்.

தள்ளிவைத்த அணிகள்

தள்ளிவைத்த அணிகள்

ஆனால், அப்படி அணிகள் கொடுத்த பட்டியலில் ரெய்னா பெயர் இல்லை. இதனால் ரெய்னா Blacklist செய்யப்பட்டாரா என்ற சேந்தேகம் எழுந்துள்ளது. பிளாக்லிஸ்ட் என்றால் நாட்டாமை படத்தில் ஊரை விட்டு தள்ளி வைப்பார்களே அதே மாதிரி தான். ரெய்னாவை அனைத்து அணிகளும் புறக்கணித்துவிட்டன. ரெய்னா உள்ளூர் போட்டியில் கூட விளையாடமல் இருப்பதும் இந்த சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.

Story first published: Sunday, February 13, 2022, 20:16 [IST]
Other articles published on Feb 13, 2022
English summary
IPL Mega auction 2022- Suresh raina is became unsold in second time- Reason BLACKLIST செய்யப்பட்டாரா ரெய்னா..? 2வது முறை ஏலம் மேடைக்கே வராத சோகம்..! துரோகம் இழைத்ததா சிஎஸ்கே?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+