Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் மெகா ஏலம்.. நேரலையை எங்கு? எப்படி? பார்ப்பது.. 600 வீரர்களுக்கான கடும் போட்டி இன்று தொடக்கம்!

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ஐபிஎல் 2022 மெகா ஏலம் இன்று பெங்களூருவில் தொடங்கவுள்ளது.

10 அணிகள் பங்கேற்கும் இந்த மெகா ஏலத்தில் மொத்தமாக 600 வீரர்கள் ஏலம் விடப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக தலா 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்துள்ளதால், அதிகப்படியான வீரர்களை ஏலம் எடுக்க போட்டிப்போட்டு வருகின்றன.

கடைசி மெகா ஏலம்?

கடைசி மெகா ஏலம்?

2018ம் ஆண்டிற்கு பிறகு நடைபெறும் முதல் மெகா ஏலம் இதுவாகும். இதன் பின்னர் மெகா ஏலம் ஒன்று நடைபெற வாய்ப்புகள் மிக குறைவு என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. எனவே கடைசி மெகா ஏலம் தான் அணிகளின் எதிர்காலம் என்பதை மனதில் வைத்து ஒவ்வொரு அணி நிர்வாகிகளும் பெரும் திட்டங்களுடன் களமிறங்கியுள்ளனர்.

நிகழ்ச்சி நேரம்

நிகழ்ச்சி நேரம்

இந்த நிகழ்ச்சியானது பெங்களூருவில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று மற்றும் நாளை நடைபெறுகிறது. சரியாக காலை 11 மணியளவில் தொடங்கி மாலை வரை வீரர்கள் ஏலம் விடப்படவுள்ளனர். மார்க்யூ வீரர்கள் என்று அறிவிக்கப்பட்ட டாப் 10 மதிப்புமிக்க வீரர்கள் ஏலத்தில் விடப்படவுள்ளனர்.

இன்றைய ப்ளான்

இன்றைய ப்ளான்

இன்றைய நாளில் மொத்தமாக 160 வீரர்கள் வரை ஏலம் போவார்கள் என வல்லுநர்கள் கூறியுள்ளனர். ஏலம் போகாத மீதமுள்ள வீரர்கள் அனைவரும் நாளைய தினம் மீண்டும் அடிப்படை தொகையில் இருந்து ஏலம் விடப்படுவார்கள். இதில் ஃபார்ம் அவுட்டான சீனியர் வீரர்கள் பலரையும் பார்க்கலாம் என கூறப்படுகிறது.

Recommended Video

KKR buy Shreyas, Warner Joins DC | IPL 2022 Auction | OneIndia Tamil
எப்படி பார்ப்பது?

எப்படி பார்ப்பது?

நிகழ்ச்சியை ரசிகர்கள் காண கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நேரலையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் உள்ளிட்ட சேனல்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய்யப்படுகிறது. இதே போல டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் செயலியிலும் நேரலை செய்யப்படுகிறது. இதுமட்டுமலாமல் ஏலம் தொடர்பான உடனடி தகவல்களை mykhel tamil வலைதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்.

Story first published: Saturday, February 12, 2022, 9:10 [IST]
Other articles published on Feb 12, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+