Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL Auction: ஐபிஎல் மெகா ஏலம் எத்தனை மணிக்கு? அணிகளின் பர்ஸ் விவரம்.. லைவ்-வாக பார்ப்பது எப்படி?

ஜெட்டா: 2025 ஐபிஎல் மெகா ஏலம் நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஐபிஎல் ஏலம் எத்தனை மணிக்கு துவங்கும்? எந்த தொலைக்காட்சி மற்றும் மொபைல் ஆப்-இல் பார்க்கலாம்? எந்த இடத்தில் நடைபெறுகிறது? ஒவ்வொரு அணியும் வைத்திருக்கும் மீதத் தொகை எவ்வளவு? என்பன பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

ipl auction 2025 ipl auction ipl 2025 2025 2025

2025 ஐபிஎல் மெகா ஏலம் நடக்கும் தேதி மற்றும் நேரம்:

நவம்பர் 24 (ஞாயிறு) மற்றும் நவம்பர் 25 (திங்கள்) ஆகிய இரண்டு நாட்களில் 2025 ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு ஏலம் துவங்கி நடைபெறும்.

2025 ஐபிஎல் மெகா ஏலம் எந்த தொலைக்காட்சியில் நேரலையில் ஒளிபரப்பாகும்?

2025 ஐபிஎல் மெகா ஏலம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழும தொலைக்காட்சி சேனல்களில் நேரலையில் ஒளிபரப்பாகும்.

2025 ஐபிஎல் மெகா ஏலம் எந்த மொபைல் ஆப்-இல் ஸ்ட்ரீமிங் செய்யப்படும்?

2025 ஐபிஎல் மெகா ஏலத்தை ஜியோசினிமா மொபைல் செயலி மற்றும் இணையதளத்தில் இலவசமாக காணலாம்.

2025 ஐபிஎல் மெகா ஏலம் எந்த நாட்டில், எந்த நகரத்தில் நடைபெறுகிறது?

2025 ஐபிஎல் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா என்ற நகரத்தில் நடைபெற உள்ளது. பத்து ஐபிஎல் அணிகளை சேர்ந்தவர்கள் இந்த ஏலத்தில் நேரடியாக பங்கேற்க உள்ளனர்.

2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்கேற்க உள்ள 10 ஐபிஎல் அணிகளின் மீதத் தொகை எவ்வளவு?

சென்னை சூப்பர் கிங்ஸ் - 55 கோடி

டெல்லி கேப்பிடல்ஸ் - 73 கோடி

குஜராத் டைட்டன்ஸ் - 69 கோடி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 51 கோடி

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - 69 கோடி

மும்பை இந்தியன்ஸ் - 45 கோடி

பஞ்சாப் கிங்ஸ் - 110.50 கோடி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 83 கோடி

ராஜஸ்தான் ராயல்ஸ் - 41 கோடி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 45 கோடி

Story first published: Saturday, November 23, 2024, 16:47 [IST]
Other articles published on Nov 23, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+