"பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்" காவ்யா மாறனை வம்பு செய்த பஞ்சாப்.. தெறிக்கும் மீம்ஸ்!
ஜெட்டா: ஐபிஎல் மெகா ஏலத்தில் முதல் நாள் முடிவடைந்திருக்கும் நிலையில், 10 அணிகளின் செயல்பாடுகளை வைத்து சோசியல் மீடியாவில் ரசிகர்கள் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.
மாநாடு படத்தில் சிம்புவை முதல்முறையாக பார்க்கும் எஸ்ஜே சூர்யா, "கரக்ட்டா இருப்பான்ல.. பெர்ஃபெக்ட்டா இருப்பான்" என்று சொல்வார். அதனை அப்படியே சிம்புவை விஜய் சங்கராக மாற்றி, எஸ்ஜே சூர்யாவை சிஎஸ்கே ரசிகர்களாக மாற்றி, ”ஜாதவ் மாதிரி பழி போட கரக்ட்டா யூஸ் ஆவான்ல” என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் ஜாலியோ ஜிம்கானா ரகம்.

தனி ஒருவன் படத்தில் அரவிந்த்சாமி, ”இல்லாத வாய்ப்பை உருவாக்கவும் தெரியும்.. அந்த வாய்ப்பை இழுத்து தக்க வச்சுக்கவும் தெரியும்” என்று சொல்வார். அதனை அப்படியே அரவிந்த்சாமியாக மும்பை அணியை மாற்றி ராபின் மின்ஸை எடுத்ததன் மூலமாக, ”ஃபேமஸ் இல்லாத பிளேயரை எடுத்து அவனை டைமண்ட்-ஆக மாற்றுவது தான் நம்ம ஃபார்முலா” என்று உருவாக்கப்பட்டுள்ள மீம்ஸ் மரண மாஸ்.

பிதாமகன் படத்தில் லைலாவிடம் வம்பு செய்யும் சூர்யா, ”இப்போ உனக்கு விழுந்துருக்கா.. ஏன்னா உருட்டு அப்படி” என்று சொல்வார். அதனை அப்படியே மாற்றி சூர்யாவாக பிரீத்தி ஜிந்தாவையும், லைலாவாக காவ்யா மாறனையும் மாற்றி அர்ஷ்தீப் சிங்கை ஆர்டிஎம் மூலம் பஞ்சாப் அணி விவகாரத்தை வைத்து, "உருட்டு அப்படி" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் தக் லைஃப் ரகம்.

ரஜினி முருகன் படத்தில் சிவகார்த்திகேயன் பஞ்சாயத்து பேச வரும் மூன்று பேரை பார்த்து, ”டேய்.. 3 இடியட்ஸ்.. பஞ்சாயத்தே முடிய போகுது.. இப்போவாச்சும் கொஞ்சம் பேசுங்டா” என்று சொல்வார். இதனை மும்பை அணி சுமார் 5 மணி நேரமாக அமைதியாக இருந்ததை பார்த்து ஆகாஷ் அம்பானி மற்றும் நீட்டா அம்பானியை பஞ்சாயத்து பேச வந்தவர்களாக மாற்றி உருவாக்கப்பட்டுள்ள மீம் அட்ரா சக்க ரகம்.

உள்ளத்தை அள்ளித்தா படத்தில் கார்த்தியிடம் பணம் ஏமாற்றிவிட்டு சுவர் ஏறி குதித்து வீட்டிற்கு வந்து பார்த்தால், கார்த்தி வீட்டில் அமர்ந்திருப்பார். ஏன் இவனிடம் ஏமாற்றினோம் என்ற வகையில் கவுண்டமணி ஒரு லுக் விடுவார். அதனை அப்படியே மாற்றி ரீடெய்ன் செய்யாத அர்ஷ்தீப் சிங்கை வாங்குவதற்கு பஞ்சாப் அணி மீண்டும் செலவு செய்ததை வைத்து கார்த்தியாக பஞ்சாப் அணியாகவும், கவுண்டமணியாக அர்ஷ்தீப்பையும் வைத்து உருவாக்கப்பட்டுள்ள மீம் பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம் மொமண்ட்.


Click it and Unblock the Notifications