Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஈசாலா கப் நம்தே சொல்லலாமா.. ஆர்சிபி அணி எப்படி கட்டமைக்கப்பட்டுள்ளது? அரியாசனத்தில் விராட் கோலி?

ஜெட்டா: ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் முடிவடைந்துள்ள நிலையில், ஆர்சிபி அணி தரப்பில் மொத்தமாக 22 வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதற்காக மொத்தம் ரூ.119.25 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்த மெகா ஏலத்தில் ஆர்சிபி அணியின் செயல்பாடு எப்படி இருந்தது என்பதை பார்க்கலாம்.

ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் முடிவடைந்துள்ள நிலையில், ஆர்சிபி அணி 18வது சீசனுக்கான வீரர்களை வாங்கியுள்ளது. கடந்த சில ஐபிஎல் ஏலங்களை போல் அல்லாமல், இம்முறை சின்னச்சாமி மைதானத்தில் நன்றாக செயல்படக் கூடிய வீரர்கள் யார் என்று அடையாளம் கண்டு ஆர்சிபி நிர்வாகிகள் வாங்கி இருக்கின்றனர் என்று பார்க்கப்படுகிறது.

ipl auction 2025 ipl auction virat kohli 2025

ஏற்கனவே விராட் கோலி, ரஜத் பட்டிதர் மற்றும் யாஷ் தயாள் ஆகியோர் ரீடெய்ன் செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து முதல் நாள் ஏலத்தில் ஜோஷ் ஹேசல்வுட் ரூ.12.50 கோடி, பில் சால்ட் ரூ.11.50 கோடி, ஜித்தேஷ் சர்மா ரூ.11 கோடி, லியம் லிவிங்ஸ்டன் ரூ.8.75, ரஷீக் தார் ரூ.6 கோடி, சுயாஷ் சர்மா ரூ.2.6 கோடிக்கு வாங்கப்பட்டனர். தற்போது 2வது நாள் மெகா ஏலத்தில் புவனேஷ்வர் குமார் ரூ.10.75 கோடி, க்ருணால் பாண்டியா ரூ.5.75 கோடி, டிம் டேவிட் ரூ.3 கோடி, ரொமாரியோ ஷெப்பர்ட் ரூ. 1.50 கோடிக்கு வாங்கியுள்ளது.

அதேபோல் தேவ்தத் படிக்கல் ரூ.2 கோடி, துஷாரா ரூ.1.60 கோடி, இங்கிடி ரூ.1 கோடி, ஸ்வப்னில் சிங் ரூ.50 லட்சம், மோகித் ராதே ரூ.30 லட்சம், அபினந்தன் சிங் ரூ.30 லட்சம், ஸ்வஸ்டிக் சிக்கரா ரூ.30 லட்சம், மனோஜ் பண்டாகே ரூ.30 லட்சம் உள்ளிட்டொரையும் வாங்கி இருக்கிறது. இதன்படி பிளேயிங் லெவன் என்று வரும் போது விராட் கோலி, பில் சால்ட், ரஜத் பட்டிதர், லியம் லிவிங்ஸ்டன், ஜித்தேஷ் சர்மா, டிம் டேவிட், க்ருணால் பாண்டியா ஆகியோர் டாப் 7 வீரர்கள் இருப்பார்கள்.

பின்னர் பவுலிங்கில் புவனேஷ்வர் குமார், ஹேசல்வுட், ரஷீக் தார், சுயாஷ் சர்மா ஆகியோர் இடம்பெற வாய்ப்புகள் உள்ளது. இம்பேக்ட் வீரராக யாஷ் தயாள் களமிறங்கலாம். இதன்படி பார்த்தால் ஆர்சிபி அணிக்கு ஸ்பின்னர்கள் மட்டுமே சிக்கலாக இருப்பதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் க்ருணால், ஸ்வப்னில் சிங் மற்றும் சுயாஷ் சர்மா ஆகியோர் மட்டுமே முகம் தெரிந்த ஸ்பின்னர்கள்.

இதில் புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள் மற்றும் ஹேசல்வுட் ஆகியோருக்கு தங்களின் ஆட்டமும், சின்னச்சாமி மைதானத்தில் எப்படி பவுலிங் செய்ய வேண்டும் என்பதும் நன்றாக தெரியும். பவர் பிளே ஓவர்கள் மற்றும் டெத் ஓவர்களில் புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள் இருவரும், ஹேசல்வுட் மிடில் ஓவர்களிலும் பயன்படுத்தப்பட வாய்ப்புகள் உள்ளது.

க்ருணால் பாண்டியாவை பொறுத்தவரை எளிதாக 2, 3 ஓவர்களை கட்டுக்கோப்புடன் பவுலிங் செய்யக் கூடியவர். ஆனால் விக்கெட் டேக்கர் பவுலர்களை எடுக்காதது அந்த அணிக்கு பின்னடைவாக உள்ளது. ஆனால் பேட்டிங்கை பொறுத்தவரை ஆர்சிபி அணியால் எவ்வளவு பெரிய இலக்கையும் சேஸ் செய்ய முடியும் என்று நம்பலாம். மேலும் கேப்டனாக விராட் கோலி மீண்டும் பொறுப்பேற்க அதிக வாய்ப்புகள் உள்ளது.

ஆர்சிபி அணி விவரம்: விராட் கோலி, ரஜத் பட்டிதர், ஜோஷ் ஹேசல்வுட், பில் சால்ட், ஜித்தேஷ் சர்மா, லியம் லிவிங்ஸ்டன், ரஷீக் தார், சுயாஷ் சர்மா புவனேஷ்வர் குமார், க்ருணால் பாண்டியா, டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், தேவ்தத் படிக்கல், ரொமாரியோ ஷெப்பர்ட், இங்கிடி, ஸ்வப்னில் சிங், மோகித் ராதே, அபினந்தன் சிங், ஸ்வஸ்டிக் சிக்கரா, மனோஜ் பண்டாகே, யாஷ் தயாள்.

Story first published: Monday, November 25, 2024, 23:26 [IST]
Other articles published on Nov 25, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+