Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிரித்வி ஷாவுடன் சச்சின் நேரடியாக பேசினார்.. அப்போதும் திருந்தவில்லை.. கொந்தளித்த பிசிசிஐ நிர்வாகி!

மும்பை: மும்பை அணியின் இளம் நட்சத்திர வீரரான பிரித்வி ஷாவுடன் சர்வதேச கிரிக்கெட் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி மற்றும் ரிக்கி பாண்டிங் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தியதாக முன்னாள் தேர்வு குழு உறுப்பினர் தெரிவித்துள்ளார். ஜாம்பவான் அட்வைஸ் செய்த போதும் பிரித்வி ஷா திருந்தவில்லை என்று கூறிய அவர், வாழ்வின் முக்கிய கட்டத்தில் இருப்பதாக எச்சரித்துள்ளார்.

ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய அணிக்காக ஆடிய இளம் வீரரான பிரித்வி ஷாவை அடிப்படை விலையான ரூ.75 லட்சத்திற்கு வாங்குவதற்கு கூட எந்த அணியும் முன்வரவில்லை. ஆனால் யு19 உலகக்கோப்பையில் அவருடன் விளையாடிய சுப்மன் கில், ரியான் பராக், அபிஷேக் சர்மா, அர்ஷ்தீப் சிங் உள்ளிட்டோர் அனைத்து அணிகளாலும் பெரிய தொகைக்கு ரீடெய்ன் செய்யப்பட்டுள்ளனர்.

ipl auction 2025 ipl auction prithvi shaw

இவர்கள் 4 பேருக்கும் முன்பாக இந்திய அணியில் இடம்பிடித்த பிரித்வி ஷா, ஃபிட்னஸ் மற்றும் ஒழுங்கீன பிரச்சனை காரணமாக சிக்கலில் சிக்கியுள்ளார். ஊக்க மருந்து சர்ச்சையால் 11 மாதங்கள் தடை, ஃபிட்னஸ் பிரச்சனை, பயிற்சிக்கு வராதது, பயிற்சியாளர்களுடன் மோதல், பயிற்சியாளர்களை மாற்றுவது, கன்சிஸ்டன்சி என்று பிரித்வி ஷா மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டு வருகிறது.

பிரித்வி ஷாவுக்கு கிரேக் சேப்பலே கடிதம் மூலமாக அட்வைஸ் செய்தும் அவர் இன்னும் திருந்தாமல் இருக்கிறார். இந்த நிலையில் பிரித்வி ஷாவை அருகில் இருந்து கவனித்த முன்னாள் தேர்வு குழு உறுப்பினர் ஒரு பேசுகையில், டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் 6 ஆண்டுகள் பயணித்திருக்கிறார். டெல்லி அணிக்காக விளையாடிய போதும் கூட அவரின் யு19 பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் உடன் பேசும் வாய்ப்பும் கிடைத்தது.

அதேபோல் டெல்லி அணியில் சர்வதேச ஜாம்பவான்களான ரிக்கி பாண்டிங், சவுரவ் கங்குலி உள்ளிட்டோருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு இருந்தது. அதேபோல் மும்பை அணிக்காக ரஞ்சி டிராபி தொடரில் விளையாடும் வீரர்கள் எளிதாக சச்சிண் டெண்டுல்கருடன் பேச முடியும். ஒருமுறை சச்சின் டெண்டுல்கரே நேரடியாக பிரித்வி ஷாவுடன் பேசியது அனைவருக்கும் தெரிந்த ரகசியம் தான்.

இத்தனை ஜாம்பவான்களும் முட்டாள்கள் என்று பிரித்வி ஷா நினைத்து கொண்டிக்கிறாரா? யாராவது ஒருவர் பிரித்வி ஷாவிடம் ஏதாவது மாற்றத்தை கண்டுள்ளீர்களா? ஒருவேளை மாற்றம் இருந்தாலும், இதுவரை அது வெளியில் யாருக்கும் தெரியவில்லை என்று காட்டமாக பேசி இருக்கிறார். சில நாட்களுக்கு முன்பாக நடந்த ரஞ்சி டிராபி தொடரின் போது பிரித்வி ஷா சரியாக பயிற்சிக்கு வரவில்லை.

இதனால் டென்ஷனான இந்திய அணியின் சீனியர் வீரரான அஜிங்கியா ரஹானே, நேரடியாக அவர் மும்பை அணியில் இருந்து இடைநீக்கம் செய்ய அறிவுறுத்தினார். அப்போதும் கூட பிரித்வி ஷா நேரடியாக மும்பை கிரிக்கெட் சங்கத்தை, "நானே விடுப்பு கேட்கலாம் என்று நினைத்தேன்" என்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு நக்கல் செய்தது குறிப்பிடத்தகக்து.

Story first published: Thursday, November 28, 2024, 13:47 [IST]
Other articles published on Nov 28, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+