For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கேஎல் ராகுலுக்கு மரியாதை குறைவு ஏற்படாது.. அதற்கு நான் உத்தரவாதம்.. டெல்லி ஓனர் பார்த் ஜிண்டால்!

டெல்லி: டெல்லி அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நட்சத்திர வீரரான கேஎல் ராகுலுக்கு எந்த மரியாதை குறைவும் ஏற்படாத வண்ணம் நாங்கள் பார்த்து கொள்வோம் என்று அந்த அணியின் உரிமையாளர் பார்த் ஜிண்டல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கடந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கொயங்கா மைதானத்தில் வைத்தே கேப்டன் கேஎல் ராகுலை காட்டமாக திட்டினார். 100 கேமராக்கள் முன்னால் திட்டிவிட்டு, பின்னர் வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்து சமாதானம் செய்தார். இதனால் ரசிகர்கள் பலரும் வெற்றி, தோல்வியை கடந்து கிரிக்கெட் வீரருக்கான மரியாதை முக்கியமானது என்று கருத்து கூறினர்.

ipl auction 2025 kl rahul delhi capitals 2025

இந்த நிலையில் ஐபிஎல் மெகா ஏலத்தில் நட்சத்திர வீரர் கேஎல் ராகுலை ரூ.14 கோடிக்கு டெல்லி அணி நிர்வாகம் வாங்கியது. அப்போது கேஎல் ராகுலின் ரசிகர் ஒருவர், கேஎல் ராகுலை மரியாதையுடன் நடத்துங்கள் என்று இன்ஸ்டாகிராமில் கமெண்ட் செய்தார். அதற்கு டெல்லி அணி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து, நிச்சயம் கேஎல் ராகுலை மரியாதையுடன் நடத்துவோம் என்று பதில் அளிக்கப்பட்டது.

ஏனென்றால் மனதளவில் பல்வேறு சந்தேகங்களை கொண்ட வீரராகவே கேஎல் ராகுல் இருந்துள்ளார். ஆனால் அவருக்கு நம்பிக்கை கொடுத்து விளையாட வைக்கும் போது, அவரின் ஆட்டம் உச்சத்தில் இருக்கும் என்பது ரசிகர்களுக்கு நன்றாக தெரியும். இந்த நிலையில் கேஎல் ராகுல் குறித்து டெல்லி அணியின் உரிமையாளரான பார்த் ஜிண்டால் பேசுகையில், கேஎல் ராகுல் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர் என்பது அனைவருக்கும் தெரியும்.

ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் கேஎல் ராகுலின் கன்சிஸ்டன்சி அபாரமாக இருக்கும். டெல்லியின் கோட்லா மைதானம் கேஎல் ராகுலின் பேட்டிங்கிற்கு பொருந்தி போகும் என்று நினைக்கிறேன். கிட்டதட்ட ஆர்சிபி அணியின் சின்னச்சாமி மைதானத்தை போல் கோட்லா மைதானமும் அளவில் சிறியது தான். கேஎல் ராகுலின் ஸ்ட்ரைக் ரேட் குறித்து எண்ணற்ற பேசுகள் இருக்கிறது.

ஆனால் அவர் ஒரு கிளாஸான வீரர் என்பதை யாராலும் மறுக்க முடியாது. மெகா ஏலத்திற்கான திட்டங்கள் குறித்து ஆலோசிக்கும் போது ரிஷப் பண்ட் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் தான் முதல் பட்டியலில் இருந்தனர். இவர்கள் இருவரில் ஒருவரை வாங்கினால், கேஎல் ராகுலை வாங்குவதற்கான பட்ஜெட் இருக்காது என்பதை அறிந்திருந்தோம். ஆனால் மெகா ஏலத்தில் இரு வீரர்களையுமே எங்களால் வாங்க முடியவில்லை.

ஏனென்றால் பஞ்சாப், லக்னோ மற்றும் ஆர்சிபி அணிகளிடம் எங்களை விடவும் அதிக பர்ஸ் தொகை இருந்தது. அதனால் இவர்களுக்கு பின் எந்த சிறந்த பேட்ஸ்மேன் இருக்கிறார் என்று பார்த்த போது, கேஎல் ராகுல் மட்டுமே இருந்தார். கேஎல் ராகுல் தரமான டெக்னிக் கொண்ட வீரர் என்ற நம்பிக்கை ஆழமாக உள்ளது.

அவரை ரூ.14 கோடிக்கு எங்களால் வாங்க முடிந்ததால், பவுலிங்கில் கூடுதலாக எங்களின் திட்டங்களை மெகா ஏலத்தில் செயல்படுத்த முடிந்தது. கேஎல் ராகுலின் எனது நீண்ட கால நண்பர்களில் ஒருவர். அவருக்கு தேவையான அன்பும், மரியாதையும் நிச்சயம் அளிப்போம். டெல்லி அணியின் சிறந்த சூழலில் இருந்து கோப்பையை வெல்வார் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.

Story first published: Wednesday, November 27, 2024, 21:45 [IST]
Other articles published on Nov 27, 2024
English summary
IPL Mega Auction 2025: We are going to give the Love and Respect KL Rahul Deserves says Delhi Co owner Parth Jindal - கேஎல் ராகுலுக்கு மரியாதை குறைவு ஏற்படாது.. அதற்கு நான் உத்தரவாதம்.. டெல்லி ஓனர் பார்த் ஜிண்டால்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+