Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“நச்சென்று 4 பேர்" மெகா ஏலத்தில் பல கோடி மதிப்புள்ள அதிரடி ஓப்பனர்கள்.. அடித்துக்கொள்ளும் அணிகள்!!

மும்பை: 4 அதிரடி ஓப்பனர்களுக்காக அனைத்து ஐபிஎல் அணிகளும் பணத்தை வைத்துக்கொண்டு போட்டி போட்டு வருகின்றன.

ஐபிஎல் 2022 மெகா ஏலம் வரும் பிப்ரவரி 12 மற்றும் 13ம் தேதிகளில் பெங்களூருவில் நடைபெறவுள்ளது.

இதற்காக அனைத்து அணிகளும் எந்தெந்த வீரர்களை தேர்ந்தெடுப்பது என திட்டமிட்டு அதற்கான தொகைகளையும் ஒதுக்கி வைத்துள்ளன.

 ஓப்பனிங் தேர்வுகள்

ஓப்பனிங் தேர்வுகள்

அதன்படி அனைத்து அணிகளின் முதன்மை தேர்வாக ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் உள்ளனர். ஓப்பனிங்கிற்கு பல்வேறு வீரர்கள் இருந்தாலும், பவர் ப்ளேவில் 50 - 60 ரன்களை குவிக்கக்கூடிய ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பை தான் அனைத்து அணிகளும் விரும்பும். அதன்படி 4 வீரர்கள் அதிக கவனம் ஈர்த்துள்ளனர்.

வார்னர்

வார்னர்

ஐதராபாத் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த வார்னர், கடந்தாண்டு ஏற்பட்ட மனக்கசப்பால் வெளியேறினார். கடந்த சீசன் சரியாக போகவில்லை என்றாலும் சமீபத்தில் நடந்த டி20 உலகக்கோப்பை, ஆஷஸ் தொடர் என வார்னரின் ஃபார்ம் அட்டகாசமாக உள்ளது. ஐபிஎல் தொடரில் நல்ல அனுபவம் உள்ள அவரை கேப்டனாகவே எடுப்பதற்கு சில அணிகள் கோடிக்கணக்கில் பணத்தை ஒதுக்கிவைத்துள்ளது.

 டெல்லி வீரர்

டெல்லி வீரர்

கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் 4வது அதிகபட்ச ஸ்கோர் அடித்தவர் ஷிகர் தவான். 16 போட்டிகளில் ஆடிய அவர் 587 ரன்களை குவித்தார். இதில் 3 அரைசதங்கள் அடங்கும். ஆனால் அவருக்கு 36 வயதாகிவிட்டதால், டெல்லி அணி கழட்டிவிட்டது. எனினும் தனக்கு இன்னும் திறமை உள்ளது என தென்னாப்பிரிக்க தொடரில் தவான் நிரூபித்துவிட்டார். 3 போட்டிகளில் 2 அரைசதம் விளாசினார். அதிக அனுபவம் உள்ள வீரர் என்பதால் பல அணிகளும் ஏலம் எடுக்க முயல்கின்றன.

பட்டிக்கல்

பட்டிக்கல்

கடந்த 2 சீசன்களாக ஐபிஎல் தொடரில் அதிகம் பேசப்பட்ட வீரர் தேவ்தத் பட்டிக்கல். ஆர்சிபிக்காக ஒவ்வொரு போட்டியிலும் அதிரடி தொடக்கம் கொடுத்தார். கடந்த சீசனில் கூட அட்டகாசமான சதமடித்து வியக்க வைத்தார். வயதும் குறைவாகவே இருப்பதால், எதிர்காலத்தை மனதில் வைத்து அனைத்து அணிகளும் இவரின் மீது குறிவைக்கும்.

Recommended Video

IPL Auction-லிருந்து விலகிய Ambani Wife | Oneindia Tamil
இஷான்

இஷான்

மெகா ஏல விதிமுறைகளால், மும்பை இந்தியன்ஸ் அணி வேறு வழியின்றி அதிரடி வீரர் இஷான் கிஷானை விடுவித்தது. கடந்த 2 ஆண்டுகளாக இவரின் ஃபார்ம் அட்டகாசமாக உள்ளது. இதன் விளைவாக தற்போது இந்திய டி20 அணியிலும் தொடர்ச்சியாக வாய்ப்பு பெற்று வருகிறார். பவர் ப்ளே ஓவர்களில் 50 ரன்களுக்கு மேல் வேண்டும் என நினைக்கும் அணிகள் கண்டிப்பாக இவர் மீது பெரும் தொகையை செலவழிக்கலாம்.

Story first published: Monday, February 7, 2022, 16:43 [IST]
Other articles published on Feb 7, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+