Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“கடைசி நேரத்தில் குழப்பம்” மெகா ஏலத்தில் தெளிவாக இல்லாத பிசிசிஐ.. அதிருப்தியில் அணி நிர்வாகங்கள்!

மும்பை: ஐபிஎல் தொடரில் அனைத்து அணிகளுக்கும் கடைசி நேரத்தில் பெரும் குழப்பத்தை உண்டாக்கியுள்ளது பிசிசிஐ.

Recommended Video

IPL 2022 Mega Auction Final Players List: 590 cricketers to be auctioned | OneIndia Tamil

ஐபிஎல் 2022 மெகா ஏலம் வரும் பிப்ரவரி 12 மற்றும் 13ம் தேதிகளில் நடைபெறவுள்ளன. இதற்கான கடைசிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

அனைத்து அணிகளும் தங்களது நிர்வாகிகளுடன் எந்தெந்த வீரர்களை ஏலம் எடுப்பது போன்ற திட்டப்பணிகளையும் முடித்துவிட்டன.

ஐபிஎல் மெகா ஏலம்

ஐபிஎல் மெகா ஏலம்

இதனையடுத்து நேற்று ஐபிஎல் தொடரில் ஏலம் விடப்படவுள்ள மொத்த வீரர்களின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டிருந்தது. மொத்தமாக 1,214 வீரர்கள் பதிவு செய்திருந்த நிலையில், அவர்களில் இருந்து 590 பேர் மட்டுமே தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 370 இந்திய வீரர்களும், 220 அயல்நாட்டு வீரர்களும் ஆகும்.

பெரும் குழப்பத்தில் அணிகள்

பெரும் குழப்பத்தில் அணிகள்

இந்நிலையில் இதில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய வீரர்களை ஏலம் எடுக்கலாமா என்பதில் தான் அனைத்து அணிகளும் குழம்பியுள்ளன. ஏனென்றால் ஐபிஎல் தொடர் 2 மாதங்கள் நடைபெறும் என்பதால், அப்போது இரு நாட்டு வீரர்களும் முழுமையாக இடம்பெற்று விளையாடிக்கொடுப்பார்களா என்பதில் தெளிவு கிடைக்காமல் உள்ளன.

ஆஸ்திரேலிய அணி திட்டம்

ஆஸ்திரேலிய அணி திட்டம்

ஐபிஎல் தொடர் மார்ச் 27ம் தேதி முதல் மே இறுதி வாரம் வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சமயத்தில் தான் ( மார்ச் 29 முதல் ஏப்ரல் 5 வரை) ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானுடன் வெள்ளைப்பந்து போட்டிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக டேவிட் வார்னர், பேட் கம்மின்ஸ், ஸ்மித் என முன்னணி வீரர்கள் அனைவரும் சென்றுவிடுவார்கள் எனத் தெரிகிறது.

சொதப்பும் இங்கிலாந்து

சொதப்பும் இங்கிலாந்து

இதே போல ஆஷஸ் தொடரில் அடிவாங்கிய இங்கிலாந்து அணி, வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் டெஸ்ட் தொடர்களை ஏற்படுத்த திட்டமிட்டு வருகிறது. இதே போல ஐபிஎல் தொடர் முடிந்தவுடனேயே நியூசிலாந்துடன் 3 டெஸ்ட் போட்டிகளை ஏற்பாடு செய்துள்ளது. இவற்றை மனதில் வைத்து ஏற்கனவே பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட், கிறிஸ் வோக்ஸ் போன்றோர் ஐபிஎல்-ல் இருந்து விலகிவிட்டனர்.

அணி நிர்வாகங்கள் கேள்வி

அணி நிர்வாகங்கள் கேள்வி

இந்த முறை மொத்தமாக 47 ஆஸ்திரேலிய வீரர்கள், 24 இங்கிலாந்து வீரர்கள் மெகா ஏலத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த இரு நாடுகளில் இருந்தும் தான் ஐபிஎல் தொடரின் அனைத்து அணிகளிலும் பெரும்பாலும் விளையாடுகின்றனர். பல கோடிகளில் ஏலம் எடுத்து அவர்கள் விளையாடவில்லை என்றால் என்ன செய்வது என பிசிசிஐயிடம் அனைத்து அணிகளும் கேள்வி எழுப்பியுள்ளன. இதற்கு பிசிசிஐ விரைவில் பதிலளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Wednesday, February 2, 2022, 11:09 [IST]
Other articles published on Feb 2, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+