Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அஸ்வினுக்கு ஆர்வம் காட்டாத ஐபிஎல் அணிகள்.. மளமளவென சரிந்த ரேட்.. என்ன காரணம்?

பெங்களூரு : ஐபிஎல் மெகா ஏலம் பெங்களூருவில் இன்று தொடங்கியது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ளன.

Recommended Video

DC Lost Ashwin, Dhawan, Rabada! RR, PBKS wins the Race | OneIndia Tamil

இதில் மொத்தம் 289 வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 515 கோடியே 50 லட்சம் ருபாய் இந்த ஏலத்தில் செலவு செய்யப்பட உள்ளது.

ஏலத்தின் முதலில் மார்கியூ எனப்படும் நட்சத்திர வீரர்களின் பெயர் முதலில் ஏலத்தில் விடப்பட்டது. முதலாவது வீரராக தமிழக வீரர் அஸ்வினின் பெயர் வந்தது.

அஸ்வின்

அஸ்வின்

அஸ்வின் இங்கிலாந்து தொடரில் அணியில் சேர்க்கப்படாமல் இருந்தார். இந்த நிலையில், டி20 உலககோப்பையில் அணியில் சேர்க்கப்பட்ட அஸ்வின் சிறப்பாக செயல்பட்டார். இதனைத் தொடர்ந்து நியூசிலாந்து, தென்னாப்பிரிக்க தொடரிலும் அஸ்வின் இந்திய அணிக்காக விளையாடினார்.

செயல்பாடு

செயல்பாடு

அஸ்வின் இதுவரை 167 ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி 145 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் ஐ.பி.எல் வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் அஸ்வின் 6வது இடத்தில் உள்ளார். அஸ்வினின் அனுபவமும்,. திறமையும் பல அணிக்கு கை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்வம் இல்லை

ஆர்வம் இல்லை

அஸ்வினை எடுக்க அணிகளுக்கு இடையே கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அஸ்வினின் ஆரம்ப விலை 2 கோடி ரூபாயாக இருந்தது. ஆனால் எந்த அணிகளும் முதலில் பெரும் ஆர்வம் காட்டவில்லை. பின்னர் ராஜஸ்தான் அணி, பஞ்சாப் அணி அஸ்வினுக்கு போட்டி போட்டது. சென்னை உள்ளிட்ட மற்ற அணிகள் அமைதியாகவே இருந்தன.

ராஜஸ்தான் அணி

ராஜஸ்தான் அணி

ஒரு கட்டத்தில் 5 கோடி ரூபாய்ககே அஸ்வினை ராஜஸ்தான் அணி ஏலத்தில் வாங்கியது. குறைந்த விலையில் அஸ்வின் கிடைத்துள்ளது. ராஜஸ்தான் அணிக்கு பெரும் நன்மையாக அமைந்துள்ளது. ஆனால் சென்னை அணி அஸ்வினை ஏலத்தில் எடுக்காமல் வேடிக்கை பார்த்தது தமிழக ரசிகர்களை வேதனை அடைய செய்தது.

Story first published: Saturday, February 12, 2022, 18:07 [IST]
Other articles published on Feb 12, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+