For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் ஏலத்தில் யாரை எடுக்கிறது சிஎஸ்கே..!! பயிற்சியாளர் ஃபிளமிங் வெளியிட்ட முக்கிய தகவல்..!!

பெங்களூரு: ஐபிஎல் மெகா ஏலம் குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பயிற்சியாளர் பிளமிங் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.

ஏலத்தில் சென்னை அணி எந்த வீரர்களை எடுக்கப் போகிறது என்று ரசிகர்கள் கணித்து வருகின்றனர்.

கடந்த ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏற்கனவே அணிக்காக விளையாடிய வீரர்களையும், வயதான வீரர்களை மட்டுமே தேர்வு செய்தது.

ஃபிளமிங் கருத்து

ஃபிளமிங் கருத்து

இந்த நிலையில், தற்போதைய மெகா ஏலத்திலும் அதே யுத்தியை தான் தோனி கடைபிடிப்பார் என்ற தகவல் வெளியானிது. ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி யாரை தேர்ந்து எடுக்கும் என்பது குறித்து பயிற்சியாளர் ஃபிளமிங் புதிய தகவல் ஒன்றை கூறியுள்ளார். அதில், அடுத்த 10 ஆண்டுகளை மனதில் வைத்து தான் அணியை தேர்வு செய்ய உள்ளோம் என்று அவர் கூறியுள்ளார்.

சீனியர்களுக்கு கல்தா

சீனியர்களுக்கு கல்தா

இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்காலத்தை நோக்கி பயணிக்க உள்ளது தெளிவாகியுள்ளது. இதனால் டுபிளஸி, பிராவோ, அம்பத்தி ராயுடு, சுரேஷ் ரெய்னா போன்ற வீரர்களை மீண்டும் சி.எஸ்.கே. ஏலத்தில் எடுக்காது என்று தெரிகிறது. அதற்கு பதிலாக அண்டர் 19 வீரர்களையும், இளம் இந்திய வீரர்களையும் சி.எஸ்.கே. குறிவைக்க உள்ளது.

இளம் வீரர்கள்

இளம் வீரர்கள்

குறிப்பாக இந்திய அணியின் இளம் வீரர்களான இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயரை சி.எஸ்.கே. குறிவைக்கலாம். இதில் அதிகபட்சமாக சி.எஸ்.கே. 12 முதல் 15 கோடி வரை சென்னை அணி செலவு செய்யும். இதே போன்று அவேஷ் கான், ஹர்சல் பட்டேல் , தீபக் சாஹர், சர்துல் தாக்கூர் போன்ற பந்துவீச்சாளருக்கும் சி.எஸ்.கே. அதிகபட்சமாக 10 கோடி ரூபாய் வரை செலவு செய்யலாம்.

சி.எஸ்.கே. யுத்தி

சி.எஸ்.கே. யுத்தி

இதை தவிர தினேஷ் கார்த்திக் போன்ற சில அனுபவ வீரர்களையும் சிஎஸ்கே அடிப்படை விலையிலேயே வாங்க முயற்சி செய்யும். எனினும் எந்த அணியும் தங்களது ஏலத்தின் யுத்தியை வெளிப்படையாக கூறாது. இதனால் இளம் வீரரை குறிவைக்க உள்ளோம் என்று கூறி மற்ற அணியின் கவனத்தை சிதைத்துவிட்டு, சீனியர்களை அடிப்படை விலையில் எடுக்க திட்டமாக கூட இருக்கலாம் என்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Story first published: Thursday, February 10, 2022, 13:18 [IST]
Other articles published on Feb 10, 2022
English summary
IPL Mega auction CSK Coach Stephen fleming on selecting Players strategy ஐபிஎல் ஏலத்தில் யாரை எடுக்கிறது சிஎஸ்கே..!! பயிற்சியாளர் ஃபிளமிங் வெளியிட்ட முக்கிய தகவல்..!!
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+