Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முக்கிய ஆல்ரவுண்டரை இழந்த சிஎஸ்கே..!! பிளான் போட்டு தூக்கிய டெல்லி.. என்ன செய்யபோகிறார் தோனி?

பெங்களுரு: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது முக்கிய ஆல் ரவுண்டரை பறிகொடுத்தது. இது சென்னை அணிக்கு பெரும் இழப்பை ஏற்பட்டுள்ளது.

சென்னை அணி பிராவோ, உத்தப்பா , அம்பத்தி ராயுடு போன்ற சீனியர்களை குறிவைத்து வாங்கியது.

இதே போன்று தீபக் சாஹரை 14 கோடி ருபாய் கொடுத்து சென்னை அணி வாங்கியது. இதனால் சிஎஸ்கே வின் பட்ஜெட் அடி வாங்கியது.

ஷர்துல் செயல்பாடு

ஷர்துல் செயல்பாடு

இந்த நிலையில், ஆல் ரவுண்டர் லார்ட் ஷர்துல் தாக்கூரின் பெயர் ஏல மேடைக்கு வந்தது. 61 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய ஷர்துல் 67 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஷர்துல் தாக்கூர் பேட்டிங்கில் கலக்கி வருகிறார். இதே போன்று கடைசி கட்டத்தில் Knuckle பந்துகளை வீசி விக்கெட் எடுப்பதிலும் வல்லவர்.

பின்வாங்கிய சென்னை

பின்வாங்கிய சென்னை

ஷர்துல் தாக்கூரை ஏலத்தில் எடுக்க ஐபிஎல் அணிகளுக்கு இடையே கடும் மோதல் எறபட்டது. குறிப்பாக டெல்லி, பஞ்சாப் மற்றும் சென்னை அணிகள் போட்டி போட்டனர்.இதில் ஷர்துல் தாக்கூரின் அடிப்படை விலை வேகமாக உயர்ந்தது. 4 கோடி ரூபாயை தாண்டியதும் வழக்கம் போல சென்னை அணி பின்வாங்கியது.

சிஎஸ்கேக்கு இழப்பு

சிஎஸ்கேக்கு இழப்பு

இதனையடுத்து, ராஜஸ்தானும், டெல்லி அணியும் மோதின. இதனால் ஷர்துல் தாக்கூரை 10.75 கோடி ரூபாய் கொடுத்து டெல்லி அணி வாங்கியது. இது டெல்லி அணிக்கு நல்ல பயனும் தரும். ஆனால் ஷர்துல் தாக்கூரை விட்டதால் சென்னை அணியின் பெரும் இழப்பாக பார்க்கப்படுகிறது.

சிஎஸ்கே பந்துவீச்சு

சிஎஸ்கே பந்துவீச்சு

சென்னை அணியின் பட்ஜெட்டும் தற்போது குறைந்துள்ளதால் , ஷர்துல் தாக்கூர் போன்ற வீரரை மீண்டும் ஏலத்தில் சிஎஸ்கே அணி எடுக்க வேண்டும். இல்லையேனில் அது சிஎஸ்கேக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். தற்போது வரை வேகப்பந்துவீச்சில் சென்னை அணிக்கு தீபக் சாஹர், பிராவோ மட்டுமே உள்ளனர்.

Story first published: Saturday, February 12, 2022, 19:09 [IST]
Other articles published on Feb 12, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+