Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டுபிளஸிஸை இழந்தது சென்னை அணி.. 7 கோடிக்கு தட்டி தூக்கியது பெங்களூரு அணி..

பெங்களூரு : ஐபிஎல் மெகா ஏலத்தில் அணிகள் போட்டி போட்டு வீரர்களுக்கு கோடிகளை கொட்டி வருகின்றன. அடுத்த 10 ஆண்டுகளை மனதில் வைத்து அணிகள் வீரர்களை தேர்வு செய்து வருகின்றன.

முதலில் நட்சத்திர வீரர்களின் பட்டியல் ஏலம் விடப்பட்டது. இதில் டுபிளஸிஸ் பெயர் வந்ததும், சென்னை அணி விழித்து கொண்டது

டுபிளஸை எடுக்க சென்னை அணிக்கும், பெங்களூரு அணிக்கும் கடும் மோதல் ஏற்பட்டது.

டுபிளசிஸ் செயல்பாடு

டுபிளசிஸ் செயல்பாடு

டுபிளஸிஸ் சென்னை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கியவர். சென்னை அணிக்கு பல போட்டிகளை வென்று தந்தவர். 100 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய டுபிளஸிஸ் 2935 ரன்களை விளாசியுள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 131 ஆக வைத்துள்ளார் . கடந்த சீசனில் அதிக ரன்கள் அடித்தவர் பட்டியலில் 2வது இடத்தை பிடித்துள்ளார்.

டுபிளசிஸ் அனுபவம்

டுபிளசிஸ் அனுபவம்

டுபிளஸிஸ் சர்வதேச போட்டிகளிலிருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டார். இதனால் உலகம் முழுவதும் உள்ள டி20 தொடர்களில் விளையாடி வருகிறார். இதனால் டுபிளஸிஸ் நல்ல அனுபவம் உடையவர். ஆனால் வயது காரணமாக அவரால் அதிகபட்சம் இன்னும் 2 சீசன் தான் விளையாட முடியும்.

பெங்களூரு அணி

பெங்களூரு அணி

இருப்பினும் டுபிளஸில் பெயர் வந்ததும், சென்னை அணியும், ஆர்சிபி அணியும் கடுமையாக மோதின. டுபிளஸிஸை தக்க வைக்க சென்னை பல முயற்சிகள் செய்தது. இருப்பினும் இறுதியில் டுபிளஸிஸை 7 கோடி ருபாய்க்கு பெங்களூரு அணி தட்டி சென்றது.

சென்னை ஏமாற்றம்

சென்னை ஏமாற்றம்

ஐபிஎல் மெகா ஏலத்தில் முதல் அரைமணி நேரம் சென்னை அணிக்கு மோசமாகவே அமைந்துள்ளது. சென்னை அணி முயற்சித்த எந்த வீரர்களும் கிடைக்கவில்லை. தற்போது பெங்களூரு அணிக்கு டுபிளஸிஸை வந்துள்ளதால் , அந்த அணியின் பலம் பல மடங்கு அதிகரித்துள்ளது.

Story first published: Saturday, February 12, 2022, 14:02 [IST]
Other articles published on Feb 12, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+