Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தமிழரை எடுத்ததும்! முகம் முழுக்க சந்தோசம்! உற்சாகத்தில் பொங்கிய காவியா கலாநிதி -சுந்தருக்கு ஜாக்பாட்

தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரை விடாப்பிடியாக போராடி வாங்கியுள்ளது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி.

ஐபிஎல் மெகா ஏலம் இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நட்சத்திர வீரர்களை வாங்க அனைத்து அணிகளும் போராடி வருகிறது.

ஆனால் இந்த மெகா ஏலத்தில் இன்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி காலையில் இருந்து மவுனம் காத்து வந்தது.

ஐதராபாத்தின் காத்திருப்பு

ஐதராபாத்தின் காத்திருப்பு

இன்று காலை நடைபெற்ற செஷனில் முன்னணி வீரர்களை ஏலம் விட்ட போதும், ஐதராபாத் அணி ஒரு வீரரை கூட வாங்காமல் இருந்தது. ரூ.68 கோடியை கையில் வைத்திருந்தும் இப்படி பெரிய ஆர்வம் காட்டாமல் இருந்ததால் அவர்களின் திட்டம் என்னவென்பதே புரியாமல் இருந்தது. இந்நிலையில் உணவு இடைவேளைக்கு பிறகு தனது முதல் ஏலத்தை முடித்துள்ளது. அதுவும் ஸ்பெஷல் வீரரை எடுத்துள்ளது.

யார் அந்த வீரர்

யார் அந்த வீரர்

தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் தான் அது. ஆல்ரவுண்டரான இவரை எடுக்கவும் கடும் போட்டி நிலவி வந்தது. எப்படியாவது ஒரு வீரரையாவது ஏலம் எடுத்து தனது ரேஸை தொடங்கியே ஆக வேண்டும் என்ற சூழலில் இருந்த அந்த அணி எதிர்காலத்திற்கு உதவுவார் என சுந்தரை ரூ. 8.75 கோடிக்கு ஏலம் எடுத்தது.

உணர்ச்சிவசப்பட்ட காவ்யா

உணர்ச்சிவசப்பட்ட காவ்யா

இந்நிலையில் சுந்தரை ஏலம் எடுத்தவுடன் ஐதராத்பாத் அணி உரிமையாளர் காவ்யா மாறன் திடீரென உணர்ச்சிவசப்பட்டு ஆனந்த கண்ணீர் விட்டார். நீண்ட நேரமாக பொறுமை காத்ததற்கு ஒரு சிறந்த வீரர், அதுவும் தமிழகத்தை சேர்ந்த வீரரை ஏலம் எடுத்துவிட்டதாக அவர் பெருமை கொண்டார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

தற்போதைய ஃபார்ம்

தற்போதைய ஃபார்ம்

வாஷிங்டன் சுந்தர், கடந்த 2017ம் ஆண்டு புனே அணிக்காகவும், கடந்த சீசன் வரை ஆர்சிபி அணிக்காகவும் விளையாடியுள்ளார். இவர் தற்போது இந்திய அணிக்காகவும் சிறப்பாக செயல்பட்டு வருவதால் அவரின் மீது அதிக எதிர்பார்ப்புடன் ஐதராபாத் அணி உள்ளது.

Story first published: Saturday, February 12, 2022, 18:36 [IST]
Other articles published on Feb 12, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+