IPL ஏலத்தில் இந்தியாவின் சிங்க குட்டிகள்..!! 5 வீரர்கள் காட்டில் கோடிகள் கொட்ட வாய்ப்பு
பெங்களூரு: ஐ.பி.எல். மெகா ஏலத்தில் இறுதிப் பட்டியலில் 590 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் தற்போது அண்டர் 19 உலகக் கோப்பையில் விளையாடி வரும் இந்திய வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.
Recommended Video
இதில் பல்வேறு ஆல் ரவுண்டர்கள் இடம்பெற்றுள்ளதால் அவர்களை குறிவைக்க பல அணிகள் காத்துள்ளது.
இதனால், இந்த இளம் நட்சத்திரங்கள் கோடி கணக்கில் ஏலத்தில் பணம் பெற உள்ளனர். இந்நிலையில், அவர்களின் அடிப்படை விலை என்ன என்பதை தற்போது காணலாம்.

யாஷ் துல்
இந்திய கிரிக்கெட்டின் அடுத்த விராட் கோலி என்று அழைக்கப்படம் யாஷ் துல் டெல்லியை சேர்ந்தவர். தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக யாஷ் துல் ஆடிய ஆட்டம் அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியது. கடைசியாக இவர் கடைசியாக விளையாடி 8 போட்டியில் நான்கில் அரைசதம் அடித்துள்ளார். எதிர்காலத்தில் பெரிய வீரராக வரும் அனைத்து தகுதியும் உள்ள இவரது அடிப்படை விலை 20 லட்சம். ஆனால் கோடிகளை தாண்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆங்கிரிஷ்
இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்கும் ஆங்கிரிஷ்,கடந்த 8 போட்டிகளில் விளையாடி 379 ரன்களை குவித்தார். உகாண்டா அணிக்கு எதிராக அதிரடியாக விளையாடி சதம் விளாசினார். சுழற்பந்தும் வீச தெரியும். இதனால் இவருக்கும் போட்டி கடுமையாக இருக்கும். இவரது அடிப்படை விலை 20 லட்சம் ரூபாய்.

ராஜ் பவா
அண்டர் 19 அணியின் அதிரடி இளம் வீரராக விளங்கும் ராஜ் பவா, பேட்டிங், பந்துவீச்சு என கலக்கினார். U19 உலகக் கோப்பையில் அதிவேக சதம் விளாசிய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.கடந்த 8 போட்டியில் 308 ரன்களும், 12 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இவரது அடிப்படை விலை 20 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் பல கோடியை இவர் ஏலத்தில் பெறுவார்.

ராஜவர்த்தன் ஹங்கர்கேகர்
இந்திய அணியின் அடுத்த ஹர்திக் பாண்டியா என்று போற்றப்படும் ஹங்கர்கேகர் வேகப்பந்துவீச்சிலும், அதிரடி பேட்டிங்கிற்கும் பெயர் போனவர். கடந்த 8 போட்டியில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தியவர். அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 5 சிக்சர்களை விளாசி 39 ரன்கள் குவித்தார். இவரது அடிப்படை விலை 20 லட்சம் ரூபாய் ஆகும்.

விக்கி ஆஷ்ட்வால்
U-19 உலகக் கோப்பையில் சுழற்பந்துவீச்சாளராக இடம்பெற்றுள்ள விக்கி ஆஷட்வால், 8 போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஆஷ்ட்வால் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆஷ்ட்வால் அடிப்படை விலை 20 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டிவால்ட் பிரவீஸ்
U-19 உலகக் கோப்பையில் களமிறங்கி புகழ் பெற்றவர் தென்னாப்பிரிக்க வீரர் டிவால்ட் பிரவீஸ். ஏபி டிவில்லியர்ஸ் போல் அதிரடியாக ஆடும் இவர் மீது இப்போதே பல அணிகளின் கண்கள் உள்ளது. பிரவீஸ் 5 போட்டிகளில் களமிறங்கி 368 ரன்கள் குவித்தார். களமிறங்கிய 4 இன்னிங்சில் 4 அரைசதம் அடித்துள்ள பிரவீசின் அடிப்படை விலை 20 லட்சமாகும்.


Click it and Unblock the Notifications