Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஷிகர் தவானை தட்டி தூக்கிய பஞ்சாப்.. 8.25 கோடி ரூபாய்க்கு ஏலம் போனார்.. டெல்லி ஏமாற்றம்

பெங்களூரு : ஐபிஎல் மெகா ஏலம் விறுவிறுப்பாக பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் 10 அணிகளும் வீரர்களை தேர்வு செய்ய கடும் போட்டி போடுகின்றனர்.

புதிய சீசனில் பலமான அணிகளை உருவாக்கும் விதமாக
அணிகள் தங்களுக்கு விருப்பமான வீரர்களை ஏலத்தில் தேர்வு செய்து வருகின்றனர்.

முதலில் நட்சத்திர வீரர்களின் பட்டியல் ஏலத்தில் விடப்பட்டது. ஏலத்தில் முதல் வீரராக ஷிகர் தவான் பெயர் ஏல மேடைக்கு வந்தது.

ஷிகர் தவான்

ஷிகர் தவான்

ஐ.பி.எல். வரலாற்றில் ஷிகர் தவான் 5784 ரன்கள் அடித்துள்ளார். இதன் மூலம், அதிக ரன்கள் அடித்த 2வது வீரர் என்ற பெருமையை ஷிகர் தவான் பெற்றுள்ளார். 2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஷிகர் தவானின் அதிரடியால் தான் டெல்லி அணி இறுதிப் போட்டி வரை சென்றது.

இந்திய அணியில் இல்லை

இந்திய அணியில் இல்லை

ஆனால் கடந்த சீசனில் ஷிகர் தவான் சில போட்டிகளில் சோபிக்க தவறியதால் அணியில் தக்க வைக்கப்படவில்லை. மேலும், ஷிகர் தவான் டி20 உலககோப்பைக்கான இந்திய அணியிலிருந்தும் நீக்கப்பட்டார். உள்ளூர் போட்டியிலும் ஷிகர் தவான் பெரியதாக சாதிக்கவில்லை.

மீண்டு வந்தார்

மீண்டு வந்தார்

இந்த நிலையில் தென்னாப்பிரிக்க தொடரில் ஷிகர் தவான் தனது பழைய அதிரடி ஆட்டத்தை ரசிகர்களுக்கு காட்டினார். இதனால் மீண்டும் அவருக்கு இந்திய அணியில் இடம் நிரந்தரமானது. இதனால் ஷிகர் தவானை தங்களது அணியில் எடுக்க டெல்லி, ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.

Recommended Video

KKR buy Shreyas, Warner Joins DC | IPL 2022 Auction | OneIndia Tamil
பஞ்சாப் அணி

பஞ்சாப் அணி

இதனால் 2 கோடி ரூபாய் என ஆரம்ப விலையாக இருந்த தவானின் விலை ராக்கெட் வேகத்தில் சென்றது. பின்னர் 8 கோடி ரூபாய் வரை சென்ற நிலையில் டெல்லி வெளியேறியது. இதனையடுத்து 8.25 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணி ஷிகர் தவானை தட்டி தூக்கியது. இதன் மூலம் டெல்லி அணி அவரை தக்க வைக்க தவறியது.

Story first published: Saturday, February 12, 2022, 12:41 [IST]
Other articles published on Feb 12, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+