Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஸ்ரேயாஸ் ஐயருக்கு அடிச்சது லக்.. !! பெரும் தொகைக்கு வாங்கியது கொல்கத்தா அணி..!!

பெங்களூரு : ஐபிஎல் மெகா ஏலத்தில் வீரர்களை போட்டி போட்டு அணிகள் கோடிகளை கொட்டி வருகின்றன. அடுத்த 10 ஆண்டுகளை மனதில் வைத்து அணிகள் வீரர்களை தேர்வு செய்து வருகின்றன.

முதலில் நட்சத்திர வீரர்களின் பட்டியல் ஏலம் விடப்பட்டது. இதில் ஸ்ரேயாஸ் ஐயரின் பெயர் வந்ததும், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஏன் என்றால் பல அணிகளுக்கு கேப்டன் இல்லை. ஸ்ரேயாஸை குறிவைத்தால் புதிய கேப்டன் கிடைத்துவிடுவார் என்பது தான் காரணம்.

ஸ்ரேயாஸ் பலம்

ஸ்ரேயாஸ் பலம்

ஸ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல் வரலாற்றில் 87 போட்டிகளில் விளையாடி 2375 ரன்கள் அடித்துள்ளார். அவரது ஸ்டரைக் ரேட் 123 ஆகும். இளம் வீரர், எதிர்காலத்தில் இந்திய அணியையே வழிநடத்தி செல்லும் பொறுப்பு என பல திறமை உள்ளதால், இவர் இடம்பெறும் அணி பெல மடங்கு பலம் பெரும்.

கேப்டன் பதவி

கேப்டன் பதவி

டெல்லி அணியில் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் இருந்தார். காயம் காரணமாக ஐபிஎல் போட்டியில் பங்கேற்காத நிலையில் கேப்டன் பதவி ரிஷப் பண்ட்க்கு தரப்பட்டது. இந்த நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் அணிக்கு வந்ததும், அவருக்கு கேப்டன் பதவி தரப்படவில்லை.

கடும் போட்டி

கடும் போட்டி

இதனால், கடும் ஏமாற்றத்தில் இருந்த ஸ்ரேயாஸ் ஐயர், கடந்த சீசனில் சரியாக விளையாடவில்லை. இதனால் டெல்லி அணியில் தொடர விரும்பவில்லை என்று அவர் கூறினார். இந்த நிலையில் ஏலத்தில் அவரை எடுக்க கடும் போட்டி நிலவியது. அவரது ஆரம்ப விலை 2 கோடியாக இருந்தது. ஸ்ரேயாஸ் ஐயரை எடுக்க டெல்லி, குஜராத், கொல்கத்தா அணிகள் கடுமையாக மோதியது.

12.25 கோடி

12.25 கோடி

இதனையடுத்து ஸ்ரேயாஸ் ஐயர் விலை அதிரடியாக உயர்ந்தது. ஸ்ரேயாசை டெல்லி அணி தக்க வைத்து கொள்ள கடுமையாக போட்டி போட்டன. ஸ்ரேயாஸை விட்டு கொடுக்க மூன்று அணிகளுக்கும் மனம் வரவில்லை. இதனையடுத்து கடைசியாக ஸ்ரேயாஸ் ஐயரை 12 புள்ளி 25 கோடி ரூபாய்க்கு கொல்கத்தா அணி தட்டி தூக்கியது.

Story first published: Saturday, February 12, 2022, 18:08 [IST]
Other articles published on Feb 12, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+