ஐ.பி.எல் ஏலம் தமிழக வீரர் ஷாரூக்கான் முடிவால் அணிகள் அதிர்ச்சி..30 தமிழக வீரர்கள் விலை பட்டியல்..!!
சென்னை: ஐ.பி.எல்.15வது சீசனுக்கான மெகா ஏலம் வரும் 12ஆம் தேதி பெங்களூருவில் தொடங்குகிறது.
Recommended Video
இந்த ஏலத்தில் 590 வீரர்கள் இறுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இதில் தமிழ்நாடு கிரிக்கெட் சம்மேளனம் மூலம் 30 வீரர்கள் ஐ.பி.எல். ஏலத்தில் பங்கேற்றுள்ளனர்.
இதில் தமிழக வீரர் ஷாரூக்கானின் திடீர் முடிவு அவரை ஏலத்தில் எடுக்க வேண்டும் என்று நினைத்த அணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

குறைந்த விலை
கடந்த ஐ.பி.எல். சீசனில் ஷாரூக்கான், 20 லட்சம் ரூபாய்க்கு தனது பெயரை பதிவு செய்தார். அவரை பஞ்சாப் அணி 5 கோடி ரூபாய்க்கு மேல் ஏலத்தில் வாங்கியது. இந்த நிலையில், ஷாரூக்கான் மீண்டும் தனது பெயரை 20 லட்சம் ரூபாய்க்கு பதிவு செய்து இருந்ததாக தகவல் வெளியானது. இதனால் ஷாரூக்கானை எடுக்க சி.எஸ்.கே., மும்பை அணிகள் ஆர்வம் காட்டினர்.

இருமடங்கு உயர்வு
ஆனால் ஷாரூக்கான் திடீரென்று தனது அடிப்படை விலையை 40 லட்சமாக உயர்த்தியுள்ளார். அவரது பெயர் 40 லட்சம் ரூபாய் பட்டியலில் உள்ளது. அவருக்கு இருக்கும் திறமைக்கு 2 கோடி ரூபாய்க்கே பதிவு செய்யலாம். ஆனால் தற்போது பணம் கையிருப்பு குறைவாக இருக்கும் சென்னை, மும்பை அணிகள் அவரை வாங்க வேண்டும் என்றால் கூடுதல் விலையை செலவிட வேண்டியிருக்கும்.

நட்சத்திர தமிழக வீரர்கள்
இதே போன்று தமிழக அணியின் மற்றொரு நட்சத்திர வீரரான தினேஷ் கார்த்திக், தனது அடிப்படை விலையை 2 கோடி ரூபாயாக நிர்ணயித்துள்ளார். தமிழக வீரர் வாசிங்டன் சுந்தர் தனது அடிப்படை விலையை ஒன்றரை கோடி ரூபாயாக நிர்ணயித்துள்ளார். வேகப்பந்துவீச்சாளர் நடராஜன், தனது அடிப்படை விலையை ஒரு கோடியாக நிர்ணயித்துள்ளார்.

சி.எஸ்.கே. முன்னாள் வீரர்கள்
சி.எஸ்.கே. வீரர் ஹரி நிஷாந்த், சுழற்பந்துவீச்சாளர் சாய் கிஷோர், ஜெகதீசன் ஆகியோர் தங்களது அடிப்படை விலையை 20 லட்சம் ரூபாய்க்கு தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர்.தமிழக வீரர் முரளி விஜய், ஆல் ரவுண்டர் விஜய் சங்கர் ஆகியோரும் தனது பெயரை 50 லட்சம் ரூபாய்க்கு பதிவு செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications