
யார் இந்த அமித் அலி
அந்த வகையில் இந்தாண்டும் அமித் முஸ்லேம் அலி என்ற இளம் வீரர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். 19 வயதே ஆகும் லெக் ஸ்பின்னரான இவர் திரிபுரா மாநிலத்தில் இருந்து ஐபிஎல் மெகா ஏலத்திற்காக தகுதிப் பெற்றுள்ளார். ஆனால் இவர் கடந்து வந்த பாதை அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

எல்லைப்பிரிப்பு
அமித் அலி கடந்த 2002ம் ஆண்டு திரிபுராவில் உள்ள கமலாசாகர் என்ற சிறிய கிராமத்தில் பிறந்தவர் ஆவார். இந்தியா - வங்கதேசம் எல்லைப் பிரிக்கப்பட்டதில் அமித்தின் வீடு மற்றும் கிராமத்தில் இருந்த சில பகுதிகளும் வங்கதேச எல்லைக்குட்பட்டு சென்றது. எனினும் அவர் ஒரு இந்திய குடியுரிமை பெற்றவர் ஆவார்.

கிரிக்கெட் மோகம்
வீடு வங்கதேசத்தில் இருந்த போதும், இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற ஆசையில் தினமும் இரு நாட்டு எல்லைகளை கடந்து திரிபுராவில் பயிற்சிக்கு சென்றுள்ளார். கடந்த 2021ம் ஆண்டு நடந்த விஜய் ஹசாரே கோப்பையில் திரிபுரா அணிக்காக அறிமுகமானார். அதன் பின்னர் அதே அணிக்காக சையது முஷ்டக் அலி கோப்பை தொடரிலும் டி20 போட்டியில் அறிமுகமானார்.

விக்கெட் விவரங்கள்
இந்த 2 தொடர்களிலும் சிறப்பாக விளையாடிய அமித் அலி, தற்போது ஐபிஎல் தொடரின் மெகா ஏலத்திலும் இடம்பிடித்துள்ளார். இவருக்கு வாய்ப்பு கொடுக்க சில அணிகள் முன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 12 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











