For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"ஸ்ரேயாஸ் ஐயர்.. இனி நீதாம்லே" கேகேஆர் அணியை சுளுக்கெடுத்த சுள்ளான் பஞ்சாப்.. தெறி மீம்ஸ்!

சண்டிகர்: கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் 111 ரன்களை டிஃபெண்ட் செய்து பஞ்சாப் அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த வெற்றிக்கு பின் போட்டியில் நடந்த சுவாரஸ்யங்களை வைத்து ரசிகர்கள் சோசியல் மீடியாவில் உருவாக்கிய தரமான மீம்ஸை பார்க்கலாம்.

குடும்பஸ்தன் படத்தில் மணிகண்டன், "யார்ரா நீ.. எவ்வளவு பெரிய பிரச்சனை இது.. வேற எவனாவதா இருந்தா வெடவெடத்து போய்ருப்பான்.. அப்படி ரன்னிங்லயே சால்வ் பண்ணின பாரு" என்று சொல்லுவார். அதில் வரும் மணிகண்டனை அப்படியே ஸ்ரேயாஸ் ஐயராக மாற்றி, "யார்ரா நீ.. எவ்வளவு பெரிய பிரச்சனை தெரியுமா.. வேற எவனாவதா இருந்தா வெடவெடத்து போய்ருப்பான்.. அப்படி ரன்னிங்லயே முடிச்சுட்டியே" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஜாலியோ ஜிம்கானா ரகம்.

ipl 2025 memes Shreyas Iyer

ரெண்டு படத்தில் மாதவன் மற்றும் வடிவேலு இணைந்து ஆட்டோ ஓட்டுநரை "பேல்பத்திரி சிங்" என்று போண்டியாக்குவார்கள். அதில் வரும் வடிவேலு மற்றும் மாதவனாக பஞ்சாப் அணியையும், ஏமாறும் ஆட்டோ ஓட்டுநராக கேகேஆர் அணியையும் மாற்றி, "பேல் பத்திரி சிங்" என்று அதிக ரன்கள் சேஸிங், குறைந்த ரன்கள் டிஃபெண்டிங் என்று 2 சாதனைகளை செய்ததாக உருவாக்கப்பட்டுள்ள மீம் யாரு பெத்த பிள்ளையோ.. நம்ம பிரச்சனை எல்லாம் தீர்த்து வைக்குது ரகம்.

ipl 2025 memes Shreyas Iyer

"வெந்து தணிந்தது காடு" படத்தில் 8 பேரை சுட்டுக் கொல்லும் சிம்புவை பார்த்து அவரின் கூட்டாளி ஒருவர், "எல முத்து.. இனி நீ தாம்லே" என்று மாஸாக சொல்லுவார். அதில் வரும் சிம்புவை ஸ்ரேயாஸ் ஐயராக மாற்றி, "எல ஸ்ரேயாஸ் ஐயர்.. இனி நீ தாம்லே" என்று சிறந்த ஐபிஎல் கேப்டன்களில் ஒருவராக சொல்லி உருவாக்கப்பட்டுள்ள மீம் இது நம்ம காலம்.. நீ இறங்கி ஆடுடா கபிலா ரகம்.

ipl 2025 memes Shreyas Iyer

சுள்ளான் படத்தில் தனுஷ், "பார்க்கிறதுக்கு தான் சுள்ளான்.. சூடானே சுழுக்கு எடுத்துருவேன்" என்று டயலாக் பேசுவார். அதில் வரும் தனுஷை சாஹலாக மாற்றி, "பார்க்க தான் சுள்ளான்.. சூடானேன்.. விக்கெட்ஸ் எடுத்துருவேன்" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் எங்க வந்து யாரு கிட்ட ரகம்.

ipl 2025 memes Shreyas Iyer

பைரவா படத்தில் டேனியல் பாலாஜி துப்பாக்கியை எடுத்து விஜயை மிரட்டுவார்.. அப்போது ஒரே அடியில் துப்பாக்கியை கைப்பற்றும் விஜய், "எனக்கே துப்பாக்கி" என்று பஞ்ச் டயலாக் சொல்லுவார்.. அதில் வரும் விஜயாக ஸ்ரேயாஸ் ஐயரையும், டேனியல் பாலாஜியாக கேகேஆர் அணியையும் மாற்றி, "நான் கேப்டனாக லீட் பண்ண டீம் வச்சு எங்கிட்டயே" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் வரலாம், வரலாம் வா.. பைரவா ரகம்.

ipl 2025 memes Shreyas Iyer
Story first published: Wednesday, April 16, 2025, 10:03 [IST]
Other articles published on Apr 16, 2025
English summary
IPL Memes: Brilliant memes from social media after Punjab Kings defended 111 runs against KKR at New Chandigarh
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+