Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL Memes: காவ்யா மாறனை கிண்டல் செய்யும் ரசிகர்கள்.. SRH அணியை பங்கம் செய்த மீம்ஸ்

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளையாடுகிறது என்றாலே ரசிகர்கள் காவியா மாறனின் ரியாக்ஷன் எப்படி இருக்கிறது என்று பார்க்கவே ஆர்வமாக இருப்பார்கள்.சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றால் காவியா மாறன் கொடுக்கும் ரியாக்ஷனும் தோல்வியைத் தழுவினால் காவியா மாறன் தரும் வேறு விதமான ரியாக்ஷனும் பார்க்க அவ்வளவு க்யூடாக இருக்கும்.

நேற்றைய ஆட்டத்தில் கூட சன்ரைசர்ஸ் அணி குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது, இதை தொடர்ந்து நான்கு போட்டிகளில் தோல்வியை தழுவி இருப்பதால் காவ்யா மாறன் கடுப்பாகி அணியை பார்த்து கோபமாக கத்தினார். இது சமூக வலைத்தளத்தில் டிரெண்ட் ஆனது. இதனை மீம் டெம்ப்ளேட் போட்டு ரசிகர்கள் கிண்டல் அடித்திருக்கிறார்கள்.

IPL

ஆர்யா என்ற திரைப்படத்தில் பாவனா வடிவேலுவை பார்த்து எம் பொறுமையை ரொம்ப சோதிக்கிறீங்க என்று திட்டுவாரோ அதேபோல் சன்ரைசர்ஸ் அணியை பார்த்து காவியா திட்டுவது போல் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்கள்.

இதேபோன்று காவ்யா மாறன் எப்போதுமே க்யூட்டாக ரியாக்ஷன் கொடுப்பார். நேற்று அணி மோசமாக விளையாடியதால் கோபத்தில் காவியா மாறன் கத்தினார். அந்தப் புகைப்படத்தை போட்டு இப்போதான் பார்ப்பதற்கே லட்சணமாய் இருக்கு என்று ரசிகர்கள் சன்ரைசர்ஸ் அணியை கிண்டல் செய்து வருகின்றனர். ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் மோசமாக விளையாடி வருகின்றனர். இதில் இஷான் கிஷண் ஆவது ஒரு சதம் அடித்து இருக்கிறார். ஆனால் அபிஷேக் ஷர்மா நடப்பு சீசனில் தடுமாறி வருகிறார்.

IPL memes

இதனை கிண்டல் செய்யும் விதமாக நானாவது பரவால்ல சைக்கிள் ஓட வரேன். பின்னாடி ஒருத்தவங்க சைக்கிளே இல்லாம வரான் பாருங்க அப்படி என்று அபிஷேக் சர்மாவை கிண்டல் செய்து இருக்கிறார்கள். நேற்றைய ஆட்டத்தில் வாஷிங்டன் சுந்தர் அபாரமாக விளையாடி 49 ரன்களில் ஆட்டம் இழந்தார். ஒரு ரன்னில் ஏன் அரை சதத்தை தவறவிட்டாய் என்று வாஷிங்டன் சுந்தரின் தந்தை அவரை அடிக்க வருவது போல் வடிவேல் மீம் டெம்ப்ளட்டை போட்டு ரசிகர்கள் கிண்டல் செய்துள்ளனர். ஏனென்றால் வாஷிங்டன் சுந்தரின் தந்தை மிகவும் கண்டிப்பாக என்பது குறிப்பிடத்தக்கது.

இஷான் கிஷன் முதல் போட்டியில் சதம் அடித்ததோடு அடுத்த நான்கு போட்டிகளிலும் தடுமாறி வருகிறார். இதனை நான் தண்ணீர் கேன் போட வந்தவங்க என்று ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். நேற்று ஹைதராபாத்தில் ஹெட் ரன் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சிராஜிடம் ஆட்டம் இழந்தார்.

IPL Memes

இந்த சூழலில் சிராஜ் டிஎஸ்பி கௌரவ பதவியில் இருப்பதால் கைது செய்து இழுத்து செல்வது போல் ரசிகர்கள் சிங்கம் டெம்பிளேட்டை போட்டு கிண்டல் அடித்து வருகின்றனர். நேற்றைய ஆட்டத்தில் குஜராத் அணியில் சாய் சுதர்சன், ஐந்து ரன்களில் ஆட்டம் இழக்க முக்கியமான தமிழ்நாடு வீரர் போய்விட்டார் என்று கம்மினஅ சந்தோஷப்படுவது போலவும் பின்னர் வாஷிங்டன் சுந்தர் அடித்து ஆட இன்னொரு மெயின் பிளேயர் தமிழ்நாட்டில் இருந்து விட்டார் என்று சொல்வது போலவும் சிவாஜி பட மீம் போட்டு கிண்டல் செய்து இருக்கிறார்கள்.

Story first published: Monday, April 7, 2025, 13:22 [IST]
Other articles published on Apr 7, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+